யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
நீட் தேர்வு, குடியுரிமை சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய பிரதமருக்கு கட்டளை பிறப்பித்து அதிரடி அஸ்திம் காட்டியிருக்கிறார்.. மிரட்டிய முத்துவேல் கருணாநிதி, மிரண்ட ஒன்றிய அரசு

Facebook link | Archive link

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
ஊடகவியலாளர் செந்தில் வேல் ட்விட்டர் பக்கத்தில் நீட் தேர்வு, குடியுரிமை சட்டங்கள் ரத்து குறித்து பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டளை பிறப்பித்ததாக பதிவிட்டார் என ஓர் ஸ்க்ரீன்ஷார்ட் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

மாரிதாஸ் பெயரில் இயங்கும் ரசிக பக்கம் ஒன்றிலும் இதே ட்வீட் ஸ்க்ரீன்ஷார்டை பதிவிட்டு விமர்சித்து இருந்தனர். ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து ஆராய தீர்மானித்தோம்.
உண்மை என ?

செந்தில் வேல் ட்விட்டர் பக்கம் குறித்து தேடுகையில் 1.1 லட்சம் ஃபாலோயர்கள் கொண்ட அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் அப்படி எந்த ட்வீட் பதிவும் வெளியாகவில்லை. செந்தில் வேல் பெயரில் மற்றும் அதே புகைப்படத்துடன் 1500 ஃபாலோயர்கள் கொண்ட போலியான பக்கம் இருப்பதை அறிய முடிந்தது.

இந்த ட்விட்டர் பக்கத்தில், ஜூன் 17-ம் தேதி பதிவான ட்வீடே சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த போலியான ட்விட்டர் பக்கத்தில் கட்சி சார்ந்து பரப்பப்பட்டு வரும் போலியான ட்வீட்களை உண்மை போல் பகிர்ந்து வருகிறார்கள்.
Twitter link | Archive link
முடிவு :
நம் தேடலில், நீட் தேர்வு, குடியுரிமை சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய பிரதமருக்கு மு.க.ஸ்டாலின் கட்டளை பிறப்பித்ததாக ஊடகவியலாளர் செந்தில் வேல் பதிவிட்டதாக பரவும் ட்வீட் போலியான பக்கத்தில் வெளியானது என அறிய முடிகிறது.

நீட் தேர்வு,குடியுரிமை சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய பிரதமருக்கு கட்டளை பிறப்பித்து அதிரடி அஸ்திரம் காட்டியிருக்கிறார்..
மிரட்டிய முத்துவேல் கருணாநிதி, மிரண்ட ஒன்றிய அரசு.. pic.twitter.com/PH6p2aYbco
— senthil (@Senthillvel79) June 17, 2021