YouTurn

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் பாஜகவில் இணைய போவதாக வதந்தி !

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் பாஜகவில் இணைய போவதாக வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

தி.மு.கவில் இருந்து ஜெகத்ரட்சகன் எம்.பி ராஜினாமா! எம்.பி.பதவியையும் துறக்கிறார்.. பி.ஜே.பியில் சேர முடிவு என தகவல்!



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

புதுச்சேரிக்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் மத்திய அமைச்சரும், அரக்கோணம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி வருவதாக சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.



திமுக சார்பில் புதுச்சேரி முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த தலைமை ஒத்துக்கொள்ளவில்லை என்பதால் ஜெகத்ரட்சகன் திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது என toptamilnews இணையப்பக்கத்தில் வெளியாகி இருக்கிறது.



ஆனால், தன்னை பற்றி சமூக வலைதளங்களில் பரவும் தகவலை எம்.பி ஜெகத்ரட்சகன் மறுத்து இருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், " இன்று காலை கழகத் தலைவர் தளபதியின் கட்டளையை ஏற்று, புதுவை மாநில சட்டமன்றத் தேர்தல் குறித்து காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டிருந்தேன். என் மீது சமூக வலைதளங்களில் வருகின்ற தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார். மேலும், பொய்யான வதந்திகளை பரப்பியவர்கள் மீது சைபர் க்ரைமில் புகார் அளித்து உள்ளதாகவும், நான் என்றைக்கும் கோபாலபுரத்து காவல்காரன் " எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக பரவிய தகவலை மறுத்ததோடு, வதந்தி பரப்பியவர்கள் மீது புகார் அளித்து உள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க