
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Facebook link | Archive link
விரிவான விளக்கம்
இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று புதிய அதிபரான ஜோ பைடன் ஜார்ஜ் ஃபிளாய்ட் மகளின் முன்பாக மண்டியிட்டு மன்னிப்பு கோரியதாக இப்புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. ஆகையால், இதன் உண்மைத்தன்மை குறித்து அறிந்து கொள்ள தீர்மானித்தோம்.

உண்மை என்ன ?
ஜோ பைடன் ஒரு குழந்தையின் முன்பாக முழங்காலிட்டு இருக்கும் புகைப்படத்தை ரிவர்ஜ் இமேஜ் சேர்ச் செய்கையில், கானா நாட்டைச் சேர்ந்த குழந்தை நடிகரான டான் லிட்டில் என்பவருடன் பைடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கின்றன.

ஆனால், செப்டம்பர் 18-ம் தேதி ghanaweb.com எனும் இணையதளத்தில் ஜோ பைடன் முழங்காலிட்டு இருக்கும் புகைப்படத்தில் அவருக்கு அருகே இருக்கும் சிறுவன் டான் லிட்டில் இல்லை என வெளியிட்டு இருக்கிறார்கள்.
அமெரிக்க அதிபர் வேட்பாளராக ஜோ பைடன் தேர்தல் பிரச்சாரத்திற்காக டெட்ராய்டு பகுதிக்கு சென்றுள்ளார். ஜோ பைடன் உடன் இருப்பது அங்குள்ள த்ரீ தேர்ட்டீன் கடை உரிமையாளரின் மகன் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Democratic presidential nominee Joe Biden speaks to CJ Brown as he makes a brief stop at "Three Thirteen" clothing store to buy a few items for his grandchildren while visiting Detroit, Michigan. Photo by @LeahMillis pic.twitter.com/hKVPZKIPFe
— corinne_perkins (@corinne_perkins) September 10, 2020
Twitter Archive link
Reuters உடைய வடக்கு அமெரிக்காவின் எடிட்டர் corinne_perkins என்பவர் தன் ட்விட்டர் பக்கத்தில், ஜோ பைடன் தன்னுடைய பேரக் குழந்தைகளுக்கு சில பொருட்களை வாங்க த்ரீ தேர்ட்டீன் கடைக்கு சென்றதாக குறிப்பிட்டு இதே புகைப்படத்தை பதிவிட்டு இருக்கிறார்.
Archive link
செப்டம்பர் 15-ம் தேதி ஜோ பைடன் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் டெட்ராய்டு பகுதியை குறிப்பிட்டு இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. ஆனால், புகைப்படத்தில் இருப்பது ஜார்ஜ் ஃபிளாய்ட் உடைய மகள் என எந்தவொரு தகவலும் பகிரவில்லை.
முடிவு :
நம் தேடலில், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன் ஜார்ஜ் ஃபிளாய்ட் மகளின் முன்பாக மண்டியிட்டு மன்னிப்பு கேட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது. அப்புகைப்படத்தில் இருப்பது டெட்ராய்டு பகுதியைச் சேர்ந்த சிறுவன் என நம்மால் அறிய முடிகிறது.