YouTurn

இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் எனப் பரவும் தவறான வீடியோ!

இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் எனப் பரவும் தவறான வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2023 அக்டோபர் 7 அன்று, இஸ்ரேல் மீது ஹமாஸ் மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தியது. இதனையடுத்து இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் பாராளுமன்ற பாதுகாவலர்களுக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.

பரவிய செய்தி

இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் தேவையில்லாமல் ஈரான் மீது தாக்குதலை ஏற்படுத்தி எங்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தி நாங்கள் இன்று துன்பத்தில் உள்ளோம் என்று சொல்லி அடித்து துவைக்கும் காட்சி தான் இவை இன்னும் சில நாட்களில் அதிரையும் அடித்து ஓட விடுவார்கள்..


X Link | Archive Link

விரிவான விளக்கம்

இஸ்ரேல் ஈரான் இடையே 10 நாட்களுக்கும் மேலாக போர் நடைபெற்று வந்த நிலையில், மூன்றாம்  உலகப் போர் மூளும் வாய்ப்பு இருப்பதாக உலகம் முழுவதும் பேசப்பட்டது. இச்சூழலில் இஸ்ரேல் மற்றும் ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். 


இந்நிலையில் இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் பலரும் தள்ளுமுள்ளில் ஈடுபடுவதை தெளிவாகக் காண முடிகிறது.



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்ததில், “Nypost” என்ற ஊடகப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு 03 மார்ச் 2025 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 


அதில், 2023 அக்டோபர் 7 ஆம் தேதி ஏற்பட்ட விபத்தில் உயிர் பிழைத்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அக்டோபர் கவுன்சிலின் சிறப்பு அமர்வில் குறைந்தது 40 பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் பாராளுமன்ற பாதுகாவலர்களுக்கும் இடையே ஏற்பட்ட தள்ளுமுள்ளின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது என்றும் கூறப்பட்டிருந்தது. 



இதே போன்று, “News18” பக்கத்திலும் பரவி வரும் வீடியோவின் காட்சிகளைக் குறிப்பிட்டு 2025 மார்ச் 04 அன்று செய்தி வெளியிட்டிருந்தனர். அதில், “இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் உரைக்கு சற்று முன்பு, மார்ச் 03 திங்களன்று இஸ்ரேலின் நெசெட்டில் பணயக்கைதிகளை இழந்தவர்களின் குடும்பத்தினர்கள் மற்றும் ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், இஸ்ரேலிய நாடாளுமன்றத்தின் காவலர்களுக்கும் இடையே வன்முறை மோதல் வெடித்தது“ என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 



இதன் மூலம் 2023 அக்டோபர் 7 அன்று, இஸ்ரேல் மீது ஹமாஸ் மிகப்பெரிய தாக்குதலை ஏற்படுத்தியது. இதனையடுத்து இஸ்ரேலிய பாராளுமன்றத்தில் இந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் பாராளுமன்ற பாதுகாவலர்களுக்கும் இடையே கடந்த மார்ச் மாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பது உறுதியாகிறது.


இதனை தற்போது நடந்து முடிந்த இஸ்ரேல் ஈரான் போரையடுத்து, இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.


முடிவு: 


நம் தேடலில், இஸ்ரேல் அதிபர் மகனை விரட்டி அடிக்கும் யூதர்கள் என்று கூறி பரவும் வீடியோ, கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற வேறு சம்பவத்தோடு தொடர்புடைய பழைய வீடியோ என்பது உறுதியாகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க