YouTurn

மசாஜ் செண்டர் விவகாரத்தில் விவேக் ஜெயராமனிடம் போலீஸ் விசாரணை எனப் போலிச் செய்தி !

மசாஜ் செண்டர் விவகாரத்தில் விவேக் ஜெயராமனிடம் போலீஸ் விசாரணை எனப் போலிச் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மசாஜ் செண்டர் என்ற பெயரில் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக ஜெயா டிவி சி இ ஓ விவேக் ஜெயராமன் மீது புகார். போலீஸார் விசாரணை !

விரிவான விளக்கம்

சசிகலாவின் அண்ணன் மகனும், இளவரசியின் மகனுமான விவேக் ஜெயராமன் ஜெயா டிவியின் சிஇஓ ஆக உள்ளார். அவரின் மீது மசாஜ் செண்டர் என்ற பெயரில் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக எழுந்த புகாரில் போலீசார் விசாரணை செய்து வருவதாக பாலிமர் செய்தியின் ஸ்க்ரீன்ஷார்ட் ஒன்று பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாசகர்கள் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தேடிப் பார்க்கையில், அந்த ஸ்க்ரீன்ஷார்ட் போலியானது மற்றும் எடிட் செய்யப்பட்டது எனத் தெரிந்து கொள்ள முடிந்தது. பாலிமர் செய்தியில், " கொடநாடு வழக்குத் தொடர்பாக சசிகலா உறவினர் விவேக் ஜெயராமனிடம் விசாரணை " எனும் தலைப்பிலே செய்தி வெளியாகி இருக்கிறது.



Twitter link

மேற்காணும் செய்தியின் ஸ்க்ரீன்சார்ட்டில், மசாஜ் செண்டர் குறித்து விசாரணை என எடிட் செய்து இருக்கிறார்கள். அதிலும் கூட, பாலிமர் செய்தியின் பதிவில் பயன்படுத்தப்பட்ட கொடநாடு டக் போன்றவற்றை அப்படியே விட்டு உள்ளனர்.



2017ல் நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணை நடைபெறு வருகிறது. இதற்கு முன்பாக எஸ்டேட் மேலாளரிடம் 3 முறை விசாரணை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து சசிகலாவின் அண்ணன் மகன் விவேக் ஜெயராமனிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.

முடிவு : 

நம் தேடலில், மசாஜ் செண்டர் என்ற பெயரில் சட்டத்துக்குப் புறம்பான செயல்களில் ஈடுபட்டதாக ஜெயா டிவி சிஇஓ விவேக் ஜெயராமன் மீது புகார், போலீஸார் விசாரணை எனப் பரவும் பாலிமர் செய்தி போலியானது மற்றும் எடிட் செய்யப்பட்டது என அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க