YouTurn

" நான் ஜெயலலிதாவின் மகன் " என்றுள்ள ஆவணம். உண்மை என்ன?

" நான் ஜெயலலிதாவின் மகன் " என்றுள்ள ஆவணம். உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஒருவர் உயிருடன் இருக்கும்வரை யார் எனத் தெரியாதவர்கள் அவர் இறந்த பின்பு தாம் தான் அவரின் வாரிசு என சொந்தம் கொண்டாடி வருவதை பலமுறை கண்டிருப்போம். ஜெயலலிதாவின் மகன் : ஈரோட்டை சேர்ந்த 29 வயதான கிருஷ்ணமூர்த்தி என்பவர் 2017 மார்ச் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், மறைந்த...

பரவிய செய்தி

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கும் சோபன் பாபுவிற்கும் பிறந்த மகனை தத்துக் கொடுக்கும் பத்திரம் என இணையத்தில் இப்படங்கள் வைரலாகி வருகிறது.

விரிவான விளக்கம்

ஒருவர் உயிருடன் இருக்கும்வரை யார் எனத் தெரியாதவர்கள் அவர் இறந்த பின்பு தாம் தான் அவரின் வாரிசு என சொந்தம் கொண்டாடி வருவதை பலமுறை கண்டிருப்போம்.

ஜெயலலிதாவின் மகன் :

ஈரோட்டை சேர்ந்த 29 வயதான கிருஷ்ணமூர்த்தி என்பவர் 2017 மார்ச் மாதத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கும், நடிகர் சோபன் பாபுவிற்கும் பிறந்த மகன் என்றும், தன்னை தத்துக் கொடுத்த போது எழுதிக் கொடுத்ததற்காக ஆதாரமாய் ஆவணம் ஒன்றைச் சமர்பித்தார்.



நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தியால் சமர்பிக்கப்பட்ட ஆவணத்தில் ஜெயலலிதா, சோபன் பாபு ஆகியோர் படங்கள் மற்றும் வசந்தாமணி என்பவருக்கு தத்துக் கொடுத்ததாக இடம்பெற்று உள்ளது. ஜெயலலிதாவின் மகன் எனக் கூறி நீதிமன்றம் சென்றால் இவ்விவகாரம் ஊடகங்கள் வரையிலும் சென்றது.

இந்த மனுவின் விசாரணையில் காவல்துறை தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விசாரணையில் கிருஷ்ணமூர்த்தியின் தந்தை தங்கமுத்து அவர் தனது சொந்த மகன் என்றே கூறியுள்ளார்.

கிருஷ்ணமூர்த்தி பிறந்த தேதி பற்றி தங்கமுத்து கூறியதும், மனுவில் தெரிவித்ததும் வெவ்வேறாக இருந்துள்ளது. போலீஸ் விசாரணையில் கிருஷ்ணமூர்த்தி சமர்ப்பித்த தத்துக் கொடுக்கும் ஆவணம் போலியானவை என உறுதி செய்யப்பட்டது. அந்த ஆவணத்தில் கோமலவள்ளி என்றும், இணையத்தில் கிடைக்கும் புகைப்படங்களே இடம்பெற்றுள்ளன.



இதற்கு முன்பாக கிருஷ்ணமூர்த்தி மனுவின் போது ஆய்விற்கு பிறகு போலியான ஆவணம் என உறுதி செய்யப்பட்டால் சிறைக்கு செல்ல நேரிடும் என நீதிபதி எச்சரிக்கை செய்திருந்தார்.

நீதிமன்றத்தை ஏமாற்றியது மட்டுமின்றி போலி ஆவணங்களையும் தயாரித்த குற்றத்திற்காக கிருஷ்ணமூர்த்தியை கைது செய்யுமாறும், விசாரணையை ஏப்ரல் 10-ம் தேதிக்கு ஒத்திவைத்தார், நீதிபதி மகாதேவன் “.

நான் ஜெயலலிதாவின் மகன் எனக் கூறி போலி ஆவணம் தயாரித்த கிருஷ்ணமூர்த்தி போலீசிற்கு பயந்து தலைமறைவாக இருந்தார். பின் திண்டுக்கல்லில் வைத்து அவரை கைது செய்தனர். பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கிருஷ்ணமூர்த்தி நீதிமன்றத்தில் சமர்ப்பித்த போலி ஆவணம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. ஒரு வருடத்திற்கு மேல் கடந்து தற்போது அந்த ஆவணங்கள் வைரலாகி மீண்டும் ஜெயலலிதா பற்றி அனைவரையும் பேச வைத்துள்ளது.



ஜெயலலிதா வாரிசு :

2012-ம் ஆண்டு பிரியா மகாலட்சுமி என்ற பெண் தான் ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆர்க்கு பிறந்த மகள் எனக் கூறி சர்ச்சையாக உருவெடுத்தார். இதேபோன்று 37 வயதான அம்ருதா என்பவர் ஜெயலலிதாவின் மகள் என்றும், டி.என்.ஏ சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றத்தை நாடினார். ஆனால், நீதிமன்றம் ஆதாரங்கள் ஏதுமில்லை என்று மனுவை தள்ளுபடி செய்தது.

பணம் மற்றும் அதிகாரத்திற்கு பொய்களைக் கூற யாரும் தயங்குவதில்லை..

சுருக்கமாக

இது முதல் முறை அல்ல. பலமுறை ஜெ.ஜெயலலிதாவின் வாரிசு என சொந்தம் கொண்டாடிக் கொண்டு பலரும் பேட்டி அளித்து உள்ளனர் மற்றும் வழக்குகளும் நீதிமன்றத்தில் வரை சென்றுள்ளது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.