YouTurn

ஜப்பானின் இரு பெரும் பேரழிவிலும் அசையாத நாகசாகி நுழைவாயிலா?

ஜப்பானின் இரு பெரும் பேரழிவிலும் அசையாத நாகசாகி நுழைவாயிலா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலிலும், 2011ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவிலும் நுழைவாயிலானது நிலைகுலையாமல் கம்பீரமாக நிற்கிறது என்றுக் கூறி இப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. நுழைவாயில் சேதமடையாமல் கம்பீரமாக இருந்தாலும், இச்செய்திகள் அனைத்தும் வதந்திகளே.!...

பரவிய செய்தி

நாகசாகியில் 1945 ஆம் ஆண்டில் வீசப்பட்ட அணுகுண்டு தாக்குதலையும், 2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவையும் கடந்து கம்பீரமாக நிற்கும் நுழைவாயில்.

விரிவான விளக்கம்

இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் நாகசாகியில் வீசப்பட்ட அணுகுண்டுத் தாக்குதலிலும், 2011ல் ஏற்பட்ட சுனாமி பேரழிவிலும் நுழைவாயிலானது நிலைகுலையாமல் கம்பீரமாக நிற்கிறது என்றுக் கூறி இப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.


நுழைவாயில் சேதமடையாமல் கம்பீரமாக இருந்தாலும், இச்செய்திகள் அனைத்தும் வதந்திகளே.! அந்த நுழைவாயிலைப் பற்றி விரிவாக தகவலை நாம் காணலாம்.              அமெரிக்கா இரண்டாம் உலகப் போரில் 1945 ஆண்டில் ஆகஸ்ட் 6 தேதி ஜப்பானின் ஹிரோஷிமா நகரத்தின் மீது முதல் அணுகுண்டினை வீசியது. இந்த அணுகுண்டு தாக்குதலில் 70,000 ஜப்பானிய மக்கள் இறந்தனர், பலர் காயமடைந்தனர், பலர் கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டனர். இந்த தாக்குதல் நடந்து மூன்று நாட்களுக்கு பிறகு மற்றொரு அணுகுண்டை நாகசாகியின் மீது வீசியது.


இத்தாக்குதலுக்கு பிறகு ஹிரோஷிமா மற்றும் நாகசாகி பகுதியின் நிலையை புகைப்படங்களின் மூலம் அனைவரும் அறிந்திருப்போம். அப்புகைப்படங்களில் ஒன்றில் ஹிரோஷிமாவில் இருக்கும் நுழைவாயிலானது நிலைகுலையாமல் இருந்ததை காணலாம்.


                                                        2011 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி, இரண்டாம் உலகப் போருக்கு  பின்பு ஜப்பானில் ஏற்பட்ட மிகப் பெரிய பேரழிவு ஆகும். இப்பேரழிவில் 10,000 அதிகமான மக்கள் உயிரிழந்தனர். மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட்டன. நாட்டில் பல பகுதிகள் சேதமடைந்தன.


ஓட்சுசி என்ற பகுதியில் சுனாமி பேரழிவால் கட்டிங்கள் பலத்த சேதமடைந்தன. எனினும் கான்கீரிட் கட்டிடங்கள் பெரும்பாலனவை சேதமடையவில்லை. மேலும் அப்பகுதியில் இருந்த நுழைவாயில் ஒன்று சேதமடையாமல் இருந்துள்ளது.



ஜப்பானின் ஹிரோஷிமா பகுதிகளில் ஏற்பட்ட அணுகுண்டு தாக்குதல் பேரழிவின் புகைப்படங்களையும், சுனாமியால் சேதமடைந்தப் பகுதிகளில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் ஒருமைப்படுத்திப் பார்த்தால் அதில் நுழைவாயில்கள் மட்டும் சேதமடையாமல் காட்சியளிக்கின்றன.


இந்நுழைவாயில்கள் மக்களுக்கும் நிலத்திற்கும் இடையேயான ஆன்மீகத் தொடர்பை வெளிப்படுத்துவதாக அம்மக்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர். உயிர்களை காப்பாற்றும் நோக்கத்தில் சில கட்டமைப்புகளுக்கு இடையே கோயில்களின் பாரம்பரிய டோர்ல் நுழைவாயில்களை நிறுவியுள்ளனர். படத்தில் உள்ள நுழைவாயில்களும் இவ்வகையை சார்ந்தவையே.!


நுழைவாயில்கள் ஒரே வடிவத்தில் இருந்தாலும் வெவ்வேறு காலக்கட்டத்தில், வெவ்வேறு இடங்களில் இருந்தவை என்பதே உண்மை. ஒரு நுழைவாயிலானது ஹிரோஷிமாப் பகுதியில் இருந்தது, மற்றொன்று ஓட்சுசி பகுதியில் இருந்தவை. எனவே படத்தில் உள்ள நுழைவாயில்கள் வெவ்வேறானவை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

சுருக்கமாக

இரண்டும் வெவ்வேறு இடங்களில் உள்ள நுழைவாயில்கள் ஆகும். ஒன்று ஹிரோஷிமா, மற்றொன்று ஓட்சுசி இடங்களில் இருந்த நுழைவாயில்கள் ஆகும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க