YouTurn

1,172 முறை இரத்த தானம் செய்த ஜேம்ஸ் ஹாரிசன் பற்றி தெரியுமா ?

1,172 முறை இரத்த தானம் செய்த ஜேம்ஸ் ஹாரிசன் பற்றி தெரியுமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் என்ற 81 வயது முதியவர் தன் வாழ்நாளில் 1,172 முறை இரத்ததானம் செய்து " தங்க கைக் கொண்ட மனிதர் " என அனைவராலும் அழைக்கப்படுகிறார். தன்னுடைய 18-வது வயதில் இரத்ததானம் கொடுக்க தொடங்கி 81 வயது வரையிலும் இரத்ததானம் அளித்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி...

பரவிய செய்தி

ஜேம்ஸ் ஹாரிசன் என்ற 81 வயது முதியவர் தன் வாழ்நாள் முழுவதும் 1172 முறை ரத்ததானம் செய்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பற்றி உள்ளார்.

விரிவான விளக்கம்

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேம்ஸ் ஹாரிசன் என்ற 81 வயது முதியவர் தன் வாழ்நாளில் 1,172 முறை இரத்ததானம் செய்து " தங்க கைக் கொண்ட மனிதர் " என அனைவராலும் அழைக்கப்படுகிறார். தன்னுடைய 18-வது வயதில் இரத்ததானம் கொடுக்க தொடங்கி 81 வயது வரையிலும் இரத்ததானம் அளித்து 24 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி உள்ளார்.



ஜேம்ஸ் ஹாரிசன் உடைய இரத்தம் தனித்துவமானது எனலாம்.ஏனெனில், அவரது இரத்தத்தில் அதிக அளவில் ஆன்டிபாடிகள் இருக்கின்றன. அவை குறிப்பாக ஆன்டி-டி இம்யூனோக்ளோபுலின் இன்ஜெக்சன் தயாரிப்பில் மதிப்புமிக்கவை.

ஜேம்ஸ் ஹாரிசன் இரத்தம் மூலம் உருவான ஆன்டி-டி இன்ஜெக்சன் கர்ப்பமாய் இருக்கும் பெண்களுக்கு பயன்படக்கூடியது. ஜேம்ஸ் ஹாரிசன் உடைய மகளின் இரண்டாவது மகப்பேறுவில் கூட ஆன்டி-டி இன்ஜெக்சான் பயன்படுத்தி உள்ளனர்.

" தங்க கைக் கொண்ட மனிதர் " என அழைக்கப்படும் ஜேம்ஸ் ஹாரிசன் 62 ஆண்டுகளாக 1172 முறை இரத்ததானம் செய்து உள்ளார். அதில், 1162 முறை வலது கரத்திலும், 10 முறை மட்டும் இடது கரத்திலும் இரத்ததானம் அளித்திருக்கிறார் என சிட்னி மார்னிங் ஹெரால்ட் அறிக்கை கூறுகிறது.



ஜேம்ஸ் ஹாரிசன் உடைய பிளாஸ்மா மூலம் நடைபெற்ற சிகிச்சையின் மூலம் 24 லட்சம் குழந்தைகள் காப்பாற்றப்பட்டு உள்ளதாக ஆஸ்திரேலியன் ரெட் கிராஸ் தெரிவித்து இருக்கிறது. இத்தகைய ஆன்டிபாடிகளை மொத்த ஆஸ்திரேலிய மக்களில் வெறும் 200 பேர் மட்டுமே உருவாக்குவதாக கூறப்படுகிறது.

60 ஆண்டுகளுக்கு மேலாக இரத்ததானம் அளித்து வந்த ஜேம்ஸ் ஹாரிசன் தன்னுடைய இறுதி இரத்ததானத்தை மே 2018-ல் அளித்து இருந்தார். இரத்த தானம் அளிப்பதற்கு 80 வயதே இறுதியாக இருக்கும் பட்சத்தில் ஜேம்ஸ் ஹாரிசன் தன் 81-வது வயதிலும் இரத்ததானம் அளித்து இருந்தார்.



ஜேம்ஸ் ஹாரிசன் 1000-க்கும் அதிகமாக முறை இரத்ததானம் அளித்தது கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற செய்தது. எனினும், தன் சாதனையை பிறர் முறியடிக்க வேண்டும் என்பதே அவரின் ஆசையாகும். ஏனெனில், ஒருவர் 1000 முறை இரத்ததானம் செய்ய வேண்டும் என ஜேம்ஸ் ஹாரிசன் நினைக்கிறார்.

வாழும் காலத்தில் ஆயிரம் முறை இரத்ததானம் அளித்து லட்சக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ஜேம்ஸ் ஹாரிசன் பற்றி உலகம் அறிய வேண்டும்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…