YouTurn

ஃபேஸ்புக்கில் தினமும் 2 கோடி முறை "ஜெய்ஸ்ரீராம்" பதிவாகிறது என மார்க் கூறியதாக வதந்தி!

ஃபேஸ்புக்கில் தினமும் 2 கோடி முறை "ஜெய்ஸ்ரீராம்" பதிவாகிறது என மார்க் கூறியதாக வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

“ஜெய் ஶ்ரீராம்” என்ற மந்திரம் தினம் தோறும் இரண்டு கோடி முறைக்கு மேல் ஃபேஸ்புக்கில் பதியப்படுவதாக நிறுவனர் மார்க் கூறியுள்ளார்.. ஜெய் ஶ்ரீராம்.


விரிவான விளக்கம்

இந்தியாவின் மிகப்பெரிய சமூக ஊடகமான ஃபேஸ்புக் தளத்தில் நாள்தோறும் 2 கோடிக்கும் அதிகமாக "ஜெய் ஸ்ரீராம்" எனும் வார்த்தை பதிவாகி வருவதாக ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்து உள்ளதாக அசோகன் வி எனும் முகநூல் பக்கத்தில் வெளியாகி ஆயிரக்கணக்கில் பகிரப்பட்டு வருகிறது. தமிழில் வெளியானது போன்றே இந்தி மற்றும் ஆங்கிலத்திலும் இப்பதிவு வைரலாகி உள்ளது. ஆனால், அப்பதிவுகளில் நாள்தோறும் 200 கோடி முறை "ஜெய்ஸ்ரீராம்" ஃபேஸ்புக்கில் பதிவாகி இருக்கிறது என மார்க் ஜுக்கர்பெர்க் கூறியதாக இடம்பெற்று உள்ளது.



Twitter link | archive link 



உண்மை என்ன ? 

தமிழ் மற்றும் ஆங்கிலப் பதிவுகளில் இடம்பெற்று இருக்கும் எண்ணிக்கையில் இருக்கும் குளறுபடிகளை பார்க்கையில், அது ஃபார்வர்டு செய்யப்படும் தகவல் எனப் புரிந்து கொள்ள முடிந்தது.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் "ஜெய்ஸ்ரீராம்" பதிவாகுவது குறித்த தகவலை வெளியிட்டார் என எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலோ, ஊடகத் தகவலோ வெளியாகவில்லை. மார்க் ஜுக்கர்பெர்க் உடைய முகநூல் பக்கத்தில் அப்படி எந்தவொரு பதிவும் இல்லை. ஃபேஸ்புக்கு சொந்தமான செய்தி தளமான நியூஸ்ரூமில் "ஜெய்ஸ்ரீராம்" குறித்த எந்தவொரு புள்ளிவிவரமும் இடம்பெறவில்லை.

இணையத்தில் ட்ரெண்டிங் செய்யப்படும் வார்த்தை, ஹாஷ்டக் குறித்து கூகுள் ட்ரெண்ட் மற்றும் ட்விட்டர் ட்ரெண்ட் போன்றவை மூலம் அறியலாம். இந்தியாவில் " ஜெய் ஸ்ரீராம்" எனும் வார்த்தை ட்ரெண்டிங்கில் இருத்ததா என கூகுள் ட்ரென்ட்ஸ் மூலம் தேடிய போது, ஆகஸ்ட் 2 முதல் 8-ம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களில் உச்சத்தில் இருந்துள்ளது. ஏனெனில், ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. ஆனால், அதற்கு முன்போ, பின்போ ட்ரெண்டிங் ஆகவில்லை.



மேலும் படிக்க : யூடியூபில் 3 லட்சம் பேர் சீமான் காணொளியை தேடுவதா கூகுள் அறிவித்ததா ?

இதேபோல், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உடைய காணொளியை யூடியூப் தளத்தில் 3 லட்சம் பேர் தேடுவதாக கூகுள் தரப்பில் புள்ளிவிவரம் வெளியாகியதாகக் தவறான தகவல் வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், ஃபேஸ்புக்கில் ஜெய் ஶ்ரீராம் என்ற வார்த்தை தினம்தோறும் இரண்டு கோடி முறைக்கு மேல் பதியப்படுதாக நிறுவனர் மார்க் தெரிவித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானது என்றும், ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் தரப்பில் எந்தவொரு புள்ளிவிவரமும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க