YouTurn

திமுக போல் ஆட்சி நடத்தக்கூடாது என ஜெகன் மோகன் விமர்சித்தாரா?| ஃபேஸ்புக் பதிவு.

திமுக போல் ஆட்சி நடத்தக்கூடாது என ஜெகன் மோகன் விமர்சித்தாரா?| ஃபேஸ்புக்  பதிவு.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆந்திர மாநிலத்தின் முதல்வரான ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகனின் செயல்பாடுகள் தமிழகத்தில் சமூக ஊடகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் ஜெகன் மோகனின் செயல்கள் வீடியோவாக, மீம்ஸ் ஆக பறந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு ஆதரவு பெருகி இருக்கிறது . அவரின் ஆட்சியை மக்கள் பாராட்டி...

பரவிய செய்தி

எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என திமுகவை பார்த்து கற்றுக்கொள் என என் தந்தை ராஜசேகரரெட்டி கூறுவார் - ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி.

விரிவான விளக்கம்

ந்திர மாநிலத்தின் முதல்வரான ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகனின் செயல்பாடுகள் தமிழகத்தில் சமூக ஊடகத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் ஜெகன் மோகனின் செயல்கள் வீடியோவாக, மீம்ஸ் ஆக பறந்து கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு ஆதரவு பெருகி இருக்கிறது .



அவரின் ஆட்சியை மக்கள் பாராட்டி வரும் வேளையில் , " எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என திமுகவை பார்த்து கற்றுக்கொள் என என் தந்தை ராஜசேகரரெட்டி கூறுவார் என ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி " கூறியதாக முகநூலில் சில தினங்களாக பதிவிட்டு வருகின்றனர்.  இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து கூறுமாறு ஃபாலோயர் தரப்பிலும் கேட்கப்பட்டு இருந்தது.



Archived link  



Archived link  

உண்மை என்ன ? 

2019-ம் ஆண்டு நடைபெற்ற ஆந்திர சட்டசபை மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அநேகமான இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. ஒய்.எஸ்.ஆர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னுடைய முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளுமாறு தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவரும் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின் உள்பட முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து இருந்தார்.



இது தொடர்பாக, மே 30-ம் தேதி வெளியான செய்தியில் , " தன்னுடைய பதவியேற்பு நிகழ்ச்சிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், பீகார் முதல்வர் நிதிஸ் குமார் , திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களை தனிப்பட்ட முறையில் அழைத்ததாக " வெளியாகி இருக்கிறது.



இதற்கு அடுத்து,  ஆந்திர மாநிலத்தின் முதல்வராக பதவியேற்ற பிறகு ஜெகன் மோகன் ஆற்றிய உரையில், " கடவுளின் ஆசிர்வாதத்தாலும், என்னுடைய வேண்டுதலாலும், மு.க.ஸ்டாலின் விரைவில் தமிழகத்தின் முதல்வராக பதவி ஏற்பார் " என மேடையில் பேசி உள்ளார். அது தொடர்பான செய்திகள் டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட செய்திகளில் வெளியாகி இருக்கிறது.



ஜெகன் மோகனிடம் அவரின் தந்தை ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி திமுக போல் ஆட்சி நடத்தக்கூடாது எனக் கூறி இருந்தால் எதற்காக ஜெகன் மோகன் தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு தனிப்பட்ட முறையில் ஸ்டாலினை அழைத்தார். மேலும், மக்கள் மத்தியில் மேடையில் ஸ்டாலின் தமிழகத்தின் முதல்வர் ஆவார் எனக் கூறி இருக்க தேவையில்லை.



அதேபோல், முகநூலில் பரவுவது போன்று ஜெகன் மோகன் திமுக கட்சியை விமர்சித்ததாக செய்திகளோ, பேட்டிகளோ என எங்கும் வெளியாகவில்லை. திமுகவை விமர்சித்து இருந்தால் ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் விதமாய் மாறி இருக்கும். ஆனால், அவ்வாறு எதுவும் நிகழவில்லை.

மேலும் படிக்க : ஜெகன் மோகன் ரயில்வே துப்புரவு பணியாளர்கள் சம்பளத்தை ரூ.18,000 ஆக உயர்த்தினாரா ?

மாறாக, தமிழக முகநூலில் மட்டுமே பதிவாகி இருக்கிறது. ஜெகன் மோகன் மற்றும் திமுக இடையே நல்ல நட்புறவு இருப்பதாகவே நிகழும் சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன. திமுக குறித்து வதந்தியை பரப்ப ஜெகன் மோகனையும் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

முடிவு : 

நம்முடைய தேடலில் , எப்படி ஆட்சி நடத்தக்கூடாது என திமுகவை பார்த்து கற்றுக்கொள்ள வேண்டும் என தன் தந்தை கூறியதாக ஜெகன் மோகன் எங்கும் கூறவில்லை. சமூக வலைதளங்களில் பரவும் அப்படியான கருத்துக்கள் வதந்திகள் மட்டுமே.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.