YouTurn

பணம் கிடைக்கும் என நினைத்து கமெண்ட் செய்யும் மக்கள்| ஜாக்கிசான் பெயரில் மோசடி !

பணம் கிடைக்கும் என நினைத்து கமெண்ட் செய்யும் மக்கள்| ஜாக்கிசான் பெயரில் மோசடி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நடிகர் ஜாக்கிசான் பேசும் வீடியோ ஒன்றுடன் கொரோனா பாதிப்பால் மக்களுக்கு உதவியாக பணம் வழங்குவதாக கூறி Jackie chan 07 எனும் முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோ 8.5 ஆயிரம் ஷேர்கள், 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. பிற மொழியில் வெளியான பதிவு தமிழ் மொழிக்கு ஏற்ப...

பரவிய செய்தி

எல்லா நாடுகளுக்கும்.. வீட்டிலிருந்து பதிவு செய்து 5 நிமிடங்களில் பரிசுகளை பெறுங்கள், கொரோனா வைரஸ் பாதிப்படைந்தவர்களுக்கு உதவ நாங்கள் வெளியிடுகிறோம். உங்கள் பெயரின் முதல் எழுத்தை தேர்ந்தெடுங்கள், நீங்கள் தேர்ந்தெடுத்த பரிசு கிடைக்கும். நம்பிக்கையுடன் இப்போதே செய்...



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

நடிகர் ஜாக்கிசான் பேசும் வீடியோ ஒன்றுடன் கொரோனா பாதிப்பால் மக்களுக்கு உதவியாக பணம் வழங்குவதாக கூறி Jackie chan 07 எனும் முகநூல் பக்கத்தில் வெளியான வீடியோ 8.5 ஆயிரம் ஷேர்கள், 3 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று வைரலாகி வருகிறது. பிற மொழியில் வெளியான பதிவு தமிழ் மொழிக்கு ஏற்ப மொழிமாற்றத்துடன் பகிரப்பட்டும் வருகிறது.



உங்கள் பெயரின் முதல் எண்ணை கமெண்டில் குறிப்பிடுங்கள், அதற்கு ஏற்றவாறு லட்சக்கணக்கான டாலர் தொகை அளிக்கப்படும் என ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு தொகையை குறிப்பிட்டு உள்ளார்கள். இதை உண்மை என நினைத்து தங்களின் பெயரில் வரும் எழுத்தை கமெண்ட் செய்கிறார்கள். இக்கட்டுரை எழுதும் போது கிட்டத்தட்ட 7 ஆயிரம் பேர் கமெண்ட் செய்து உள்ளார்கள். பாவம், பணம் கிடைக்காது என எப்படி சொல்வது.

கமெண்டில் அந்த பக்கத்தின் சார்பில் லிங்க் ஒன்று அளிக்கப்பட்டு உள்ளது. அதில் சென்று விவரங்களை அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. அந்த லிங்கில் சென்று பார்க்கையில் முதலில் ஜாக்கிசான் புகைப்படத்துடன் ஓர் தளம் வருகிறது. அதில் பதிவு செய்ய சொல்லி கூறப்பட்டுள்ளது. பதிவு செய்ய நுழைந்தால் திரைப்படங்கள் இருக்கும் மற்றொரு தளத்திற்கு செல்கிறது.

பிரபல நடிகர் லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணம் தருகிறார். அதற்கு லைக் செய்யுங்கள், கமெண்ட் செய்யுங்கள், உங்களின் விவரங்களை அளியுங்கள் என கூறி ஏமாற்றும் பதிவுகள் ஏராளமாக இங்குள்ளன. இதுபோன்ற பதிவுகளின் மூலம் உங்களின் தனிப்பட்ட விவரங்களை திருடுவதற்கு வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க : ராக் பணம் தருவதாக பரவும் பொய்யான செய்தி| மோசடியில் சிக்காதீர்கள் !

இதற்கு முன்பாக, தி ராக் என அழைக்கப்படும் தவானே ஜான்சன் மக்களுக்கு பணம் தருவதாக இதே போன்ற பாணியில் மோடி பதிவுகள் பகிரப்பட்டன. அந்த பதிவுகள், வீடியோக்கள் இன்றும் சமூக வலைதளங்களில் சுற்றி வருகிறது. அதேபோல், கடந்த மார்ச் மாதம் ஜாக்கிசான் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டதாக வதந்தியை பரப்பி இருந்தனர் என்பது கூடுதல் தகவல்.

மேலும் படிக்க : ஜாக்கிசானையும் விட்டு வைக்காத கொரோனா வைரஸ் வதந்தி !
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க