YouTurn

ஜாக்கிசான் இஸ்லாம் மதம் மாறியதாகப் பரவும் வதந்தி !

ஜாக்கிசான் இஸ்லாம் மதம் மாறியதாகப் பரவும் வதந்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி


உலக அளவில் ரசிகர்களைக் கொண்ட ஹாலிவுட் நடிகர் ஜாக்கிஜான், தனது நாட்டைவிட்டு அழுதபடியே வெளியேறி இஸ்லாத்தை தழுவினார்... பிரிட்டிஷ் ஹாங்காங்கில் (சீனா) பிறந்த ஜாக்கிசான், தனது அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் மூலம் உலக அளவில் ஏராளமான ரசிகர்களைப் பெற்றார். கடந்த 50 ஆண்டுகளாக திரைத்துறையில் பணியாற்றிய இவருக்கு, வாழ்நாள் சாதனையாளருக்கான ஆஸ்கார் விருது சமீபத்தில் வழங்கப்பட்டது. நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், ஸ்டண்ட் கலைஞர் என்று பண்முக திறன் கொண்ட ஜாக்கிஜான், தற்போது தனது நாட்டை விட்டே வெளியேறியுள்ளார். அதுவும் அழுதபடியே..




விரிவான விளக்கம்

ஹாங்காங்கில் பிறந்த நடிகர் ஜாக்கிசான் தனது நாட்டைவிட்டு அழுதபடியே வெளியேறி, இஸ்லாம் மதத்தைத் தழுவிக் கொண்டார் எனக் கூறி ஜாக்கிசான் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.





உண்மை என்ன ?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இதே செய்திகள் கடந்த 2016-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகின்றன என்பதை அறிய முடிந்தது.



மேலும், அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சீன மொழி ஊடகமான Yibada என்ற ஊடக பக்கத்தில், பரவி வரும் பதிவுகளில் உள்ள அதே புகைப்படத்தை குறிப்பிட்டு, கடந்த 2015 பிப்ரவரி 02 அன்றே செய்தி ஒன்று வெளியிடப்பட்டிருந்தது.

அதில், "2015, பிப்ரவரி 1 அன்று மலேசியா நாட்டின் 'கூட்டாட்சிப் பகுதிகள் தினத்தின்' (Federal Territories Day) போது மலேசிய அரசின் தலைவரான "யாங் டி-பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாத்சம் ஷா", 70 பேருடன் சேர்ந்து ஜாக்கிசானுக்கு "டத்தோ" என்ற பட்டத்துடன் கூடிய "பங்லிமா மஹ்கோடா விலயா" என்ற விருதை வழங்கினார்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



இதே போன்று "China daily" என்ற ஊடகத்திலும் கடந்த 2015 பிப்ரவரி 02 அன்று இது குறித்து "ஜாக்கி சானுக்கு மலேசிய கௌரவப் பட்டம் வழங்கப்பட்டது" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், "இங்கு விருதுகள் மற்றும் பதக்கங்கள் பெற்றுள்ள 356 பேரில் ஜாக்கி சானும் ஒருவர். மேலும் 70 திறமையான நபர்களுடன் சேர்ந்து அவருக்கு 'நைட் கமாண்டர்' என்ற பட்டமும் வழங்கப்பட்டது." என்றுள்ளது.



மேலும் ஜாக்கிசானின் வலைத்தளப்பக்கம் மற்றும் சமூக ஊடக பக்கங்களில் தேடியதிலும், அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியது குறித்து எந்த செய்தியும் வெளியிடவில்லை என்பதை உறுதிபடுத்த முடிந்தது.

மேலும் படிக்க: ஜாக்கிசான் தனது மகளுக்கு அவரது வாழ்க்கை சம்பவங்களை காட்டுவதாக தவறாகப் பரவும் திரைப்படத்தின் காட்சி !

இதற்கு முன்பும் ஜாக்கிசான் குறித்து தவறாக செய்திகள் பரவின. அது குறித்தும் நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.

முடிவு:

நம் தேடலில், நடிகர் ஜாக்கிசான் இஸ்லாம் மதத்தை தழுவியதாக பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க