YouTurn

அமெரிக்க அதிபரின் மேசையில் பெரியார் சிலையா? உண்மை என்ன?

அமெரிக்க அதிபரின் மேசையில் பெரியார் சிலையா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

நையாண்டி

சரிபார்க்கப்பட்ட கூற்று

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் மேசையில் இருப்பது ‘பெஞ்சமின் பிராங்க்ளின்’-ன் சிலை ஆகும்.

பரவிய செய்தி

அமெரிக்க அதிபர் டிரம்ப் மேஜயில் பெரியார் கதருங்க டா சங்கீஸ்...


image.png


X Link


விரிவான விளக்கம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது அலுவலகத்தில் உள்ள மேசையில் பெரியாரின் சிலையை வைத்திருப்பதாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.


உண்மை என்ன?

 

பரப்பப்படும் புகைப்படத்தை ’Reverse Image Search’ மூலம் இணையத்தில்  தேடியதில், ‘Daily Mail Sport’ என்ற யூடியூப் தளத்தில் ‘Shorts’ வீடியோ ஒன்றைக் காணமுடிந்தது. ‘ஆலிவர் ரியக்ஸ்’ என்ற கூடைப்பந்து வீரர் அதிபர் டிரம்பை அவரது அலுவலத்தில் சந்தித்தபோது எடுக்கப்பட்ட அந்த வீடியோ கடந்த மே 22 அன்று பதிவேற்றப்பட்டுள்ளது.


image.png


இந்த வீடியோவில் டிரம்ப் மேசையில் ஒரு சிற்பம் இருப்பதைக் காண்கிறோம். ஆனால், அது ’பெரியார்’-ன்சிற்பம் அல்ல. அந்த சிற்பத்தின் புகைப்படத்தை ’Reverse Image Search’ முறையில் தேடியபோது, ‘Harvard Art Museums’ தளத்தில் அதனைப் பற்றிய குறிப்புகளைக் காணமுடிந்தது. அதில், இந்த சிற்பம் அமெரிக்க மேதை ‘பெஞ்சமின் பிராங்க்ளின்’-ன் சிற்பம் என்று குறிப்பிடிருந்தது. இவர், சுதந்திர அமெரிக்காவின் நிறுவனத் தலைவர்களில் (Founding Fathers of America) ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

image.png


இதிலிருந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்-ன் மேசையில் காணப்பட்டது ‘பெஞ்சமின் பிராங்க்ளின்’-ன் சிற்பம் என்பது உறுதியாகிறது.


முடிவு:


அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்-ன் மேசையில்  இருக்கும் ‘பெஞ்சமின் பிராங்க்ளின்’-ன் சிற்பத்தை பகடியாக ’பெரியார்’-ன் சிற்பம் என்று பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.