யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்து அல்லாதவர்கள் அறநிலையத்துறையில் அதிகாரியாக முடியாது என்பது அறநிலையத்துறையில் சட்ட விதியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பரவிய செய்தி
கோயில்களை மாநில அரசு நிர்வகிக்க கூடாது என்ற மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை எதிர்த்து இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் இமானுவேல், கஜாமைதீன், டேவிட், பிரான்சிஸ், ஆகியோர் பாராளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இதுக்கு பேரு இந்து அறநிலையத்துறை.

விரிவான விளக்கம்
’இந்து அறநிலையத்துறையில் இமானுவேல், கஜாமைதீன், டேவிட், பிரான்சிஸ் போன்ற பெயர்களையுடைய கிறிஸ்துவர்களும், இஸ்லாமியர்களும் பணி புரிகிறார்கள். 'கோவில்களை மாநில அரசு நிர்வகிக்க கூடாது' என்று நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வரப்பட்ட போது இந்து அல்லாத மதத்தைச் சேர்ந்த இந்த அதிகாரிகள் தான் அந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தனர்’ சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
இந்து அறநிலையத்துறையில் இந்து அல்லாத பிற மதங்களைச் சேர்ந்தவர்கள் பணி புரிகிறார்களா? விதிமுறைகள் அதனை அனுமதிக்கிறதா? என்பன குறித்து தேடினோம்.
1951 ஆண்டு இயற்றப்பட்ட மெட்ராஸ் இந்து சமய மற்றும் அறநிலையங்கள் சட்டத்தின் ஒரு சரத்து கீழ் கண்டவாறு குறிப்பிடுகிறது. “இந்தச் சட்டத்தின் நோக்கங்களை நிறைவேற்றுவதற்காக அமர்த்தப்பட்ட ஆணையர், கூடுதல் ஆணையர், இணை அல்லது துணை அல்லது உதவி ஆணையர் ஒவ்வொருவரும், மற்றும் வேறு அலுவலர் அல்லது பணியாளர் ஒவ்வொருவரும், எவரால் அமர்த்தப்பட்டிருந்தாலும் இந்து சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொண்ட ஒருவராக இருத்தல் வேண்டும். மற்றும் அந்த சமயத்தை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டிருப்பதை விட்டுவிடும்போது அவ்வாறு பதவி வகிப்பதையும் விட்டுவிடுதல் வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் கூட இந்த சட்ட சரத்து குறித்து இருக்கிறது. அதாவது, இந்து அல்லாதவர்கள் அறநிலையத்துறையில் அதிகாரியாக முடியாது என்பது அறநிலையத்துறையில் சட்ட விதியில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, கிறிஸ்த்துவ முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகளாக பணியாற்ற முடியாது என்பது தெளிவாக தெரியவருகிறது.
முடிவு:
கிறிஸ்த்துவ முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்கள் அறநிலையத்துறை அதிகாரிகளாக பணியாற்றி வருவதாக தவறான தகவலை சமூக வலைத்தளத்தில் பரப்புகிறார்கள்.