யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
சிக்கந்தர் தர்கா கி.பி 14ஆம் நூற்றாண்டில் திருப்பரங்குன்றம் மலையில் கட்டப்பட்டது. 700 ஆண்டுகளாக அந்த தர்கா மலையில் இருந்து வருகிறது
பரவிய செய்தி
தர்ஹா இல்லாத திருப்பரங்குன்றம் மலை.1858ல் மதுரை திருப்பரங்குன்றத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படம்.
விரிவான விளக்கம்
திருப்பரங்குன்றம் மலையின் அடிவாரத்தில் முருகன் கோவிலும், மலையின் மேல் காசி விஸ்வநாதர் கோயிலும் சிக்கந்தர் தர்வாவும் உள்ளது. வழக்கமாக கார்த்திகை தீபம் மலையில் உள்ள உச்சி பிள்ளையார் கோயிலில் தான் ஏற்றப்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டாக இந்த கார்த்திகை தீபத்தை சிக்கந்தர் தர்கா அருகில் உள்ள ‘தீபத் தூணில்’ ஏற்றவேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் சர்ச்சை செய்து வருகின்றனர். கடந்த டிசம்பர் 2ஆம் தேதியன்று தீபத் தூணில் விளக்கு ஏற்ற வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தீர்ப்பளித்தது திருப்பரங்குன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலைக் கோவிலின் பழைய புகைப்படத்தை பதிவிட்டு, ‘இந்த புகைப்படம் 1858 ஆண்டு எடுக்கப்பட்டது, அதில் தர்காவே இல்லை. எனவே தர்கா என்பது கடந்த 100 ஆண்டுகளில் கோவிலை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டது தான்’ என்று சமூக வலைத்தளத்தில் இந்துத்துவவாதிகளால் பரப்பப்படுகிறது.
1st pic- This is the original Tiruparangkundram- Subramnaya temple hill.
2,3,4- rest are all encroachments.
Question is what were we doing until they built the Dargah?
Today they changed the Tiruparankundram hill name to “Hill of Religious Harmony”🥿 👡🩴 pic.twitter.com/JXIfjQ8Rhg
#c9c8cd#FFF
; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
உண்மை என்ன ?
பரப்பப்படும் புகைப்படத்தை ‘Reverse Image Search' முறையில் இணையத்தில் தேடியபோது, ‘Victoria and Albert Museum’ என்ற இணையதளத்தில் இந்த புகைப்படத்தை காணமுடிந்தது.
இந்த புகைப்படம் லின்னேயஸ் ட்ரைப் (Linnaeus Tripe) என்ற புகைப்பட கலைஞரால் 1858ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை பற்றிய குறிப்பில் “Secunder Malay, or hill of Secunder” என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தேடிய போது, ‘Canadian Centre for Architecture’ என்ற வலைத்தளத்தில் மற்றொரு கோணத்தில் (Another Angle) எடுக்கப்பட்டிருந்த இதே புகைப்படம் இருப்பதை காணமுடிகிறது. அதிலும் இந்த புகைப்படத்தின் தலைப்பில் “Secunder malay. Therooparungoonrum pagoda at the foot of the hill” என்று எழுதப்பட்டுள்ளது.

இதே லின்னேயஸ் ட்ரைப் என்ற புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்ட மலையின் மேல் உள்ள சிக்கந்தர் தர்காவின் புகைப்படம் ‘Alamy’ என்ற வலைத்தளத்தில் காணமுடிகிறது.
இதிலிருந்து இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட காலத்திலே திருப்பரங்குன்றம் மலை சிக்கந்தர் மலை என்று சொல்லப்பட்டு வந்துள்ளது என்பதும் மலை மேல் சிக்கந்தர் தர்கா இருந்துள்ளது என்பதும் தெரியவருகிறது.
மேலும் இந்த மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா 14ஆம் நூற்றாண்டில் அதாவது 700 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டதாக வரலாற்று அறிஞர்களால் குறிப்பிடப்படுகிறது.
மேலும், பரவி வரும் இந்தப் புகைப்படம் திருப்பரங்குன்றம் மலையை முன்பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டதாகும். ஆனால் ‘சிக்கந்தர் தர்கா’ மலையின் பின்புறத்தில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேற்கூறிய விவரங்களிலிருந்து, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா 700 ஆண்டுகள் பழைமையானது என்பதும், இந்த புகைப்படம் எடுக்கப்பட்ட 1858ஆம் ஆண்டிலும் தர்கா மலையில் முக்கியமான இஸ்லாமிய வழிபாட்டு தளமாக இருந்தது என்பதும் உறுதியாகிறது.
முடிவு:
1858ஆம் ஆண்டு லின்னேயஸ் ட்ரைப் என்ற புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்ட புகைப்படத்தை கொண்டு, திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா அப்போது இருக்கவில்லை என்று தவறான தகவலை இந்துத்துவவாதிகள் மதவாத நோக்கத்தில் பரப்பி வருகிறார்கள்.