YouTurn

பழைய நீதிமன்ற தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றுவதை அங்கீகரிக்கிறதா?

பழைய நீதிமன்ற தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் கல்தூணில் தீபம் ஏற்றுவதை அங்கீகரிக்கிறதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

1931, 1996, 2017 ஆகிய ஆண்டுகளின் நீதிமன்ற தீர்ப்புகளில் கல்தூணில் தீபம் ஏற்றலாம் என்று எவ்வித குறிப்பும் இடம்பெறவில்லை.

பரவிய செய்தி

”1921ஆம் ஆண்டு தீர்ப்பு, 1996ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட தீர்ப்பு, 2017ஆம் ஆண்டு தீர்ப்பு, தற்போது டிசம்பர் ஒன்றாம் தேதி கொடுக்கப்பட்ட தீர்ப்பு இவையெல்லாமே சிக்கந்தர் தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் உள்ள தீபத்தூணில் இந்துக்கள் விளக்கு ஏற்றுவதை அங்கீகரித்துள்ளது” - ஆனந்த் ரங்கநாதன்


image.png


Link 

விரிவான விளக்கம்

திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா அருகில் இருக்கும் கல்தூணில் தீபம் ஏற்றம் வேண்டும் என்று இந்துத்துவ அமைப்புகள் தொடர்ந்து சர்ச்சை செய்து வருகின்றனர். இந்த வழக்கில் கடந்த டிசம்பர் 1ஆம் தேதி தீர்ப்பளித்த மதுரை உயர்நீதிமன்ற கிளையின் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் ‘தீபத் தூணில்’ கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார். ஆனால் மாவட்ட நிர்வாகம் இந்துத்துவவாதிகளை மலையில் தீபம் ஏற்ற அனுமதிக்கவில்லை. இந்த வழக்கு தற்போது நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக மதுரை உயர் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. 


இது தொடர்பாக ‘CNN News18’ ஆங்கில தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சியில் பேசிய ஆனந்த் ரங்கநாதன் என்பவர், “1921ஆம் ஆண்டு தீர்ப்பு, 1996ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட தீர்ப்பு, 2017ஆம் ஆண்டு தீர்ப்பு, தற்போது டிசம்பர் ஒன்றாம் தேதி கொடுக்கப்பட்ட தீர்ப்பு இவையெல்லாமே சிக்கந்தர் தர்காவில் இருந்து 15 மீட்டர் தொலைவில் உள்ள தீபத்தூணில் இந்துக்கள் விளக்கு ஏற்றுவதை அங்கீகரித்துள்ளது” என்று பேசினார். 



உண்மை என்ன?


முதலில் ஆனந்த் ரங்கநாதன் சொல்லும் தீர்ப்பு 1921ஆம் ஆண்டு அல்ல, மாறாக 1931ஆம் ஆண்டு லண்டன் ஃப்ரிவி கவுன்சில் (Privy Council) கொடுத்த தீர்ப்பாகும். இது பற்றி நமது ‘You Turn’ தளத்தில் ஏற்கனவே எழுதியுள்ளோம். இந்த வழக்கு திருப்பரங்குன்றம் மலையில் எந்தெந்த பகுதிகள் கோவிலுக்கு சொந்தமானது, எந்தெந்த பகுதிகள் தர்காவிற்கு சொந்தமானது என்ற சொத்துடைமை பிரச்சினை சம்பந்தப்பட்டதாகும். இதில் கல்தூணில் தீபம் ஏற்றுவது பற்றி எந்த விவாதமும் வைத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 


image.png


1996ஆம் ஆண்டு தீபம் ஏற்றுவது பற்றி கொடுக்கப்பட்ட தீர்ப்பில், ”மலையில் நெல்லித்தோப்பு (தர்காவுக்கு செல்லும் வழியில் உள்ளது), தர்கா, தர்காவிற்கு செல்லும் படிக்கட்டுகள் ஆகியவற்றிலிருந்து 15 மீட்டருக்கு அப்பால் என்று கணக்கில் வைத்துக்கொண்டு சரியான இடத்தைத் தேர்வு செய்து தீபம் ஏற்றிக் கொள்ள வேண்டும்" என்று உயர் நீதிமன்றம் குறிப்பிட்டது. அதேநேரத்தில், விளக்கு ஏற்றுவதற்கு சரியான இடத்தை தேர்வு செய்யும் அதிகாரத்தை கோவிலுக்கே வழங்கியது உயர் நீதிமன்றம். அதன்படி, கோவில் நிர்வாகம் ஏற்கனவே இருக்கும் வழக்கப்படி உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றவேண்டும் என்று தீர்மானித்தது. 


image.png

ஒருவேளை கோவில் நிர்வாகம் வரும் ஆண்டுகளில் திருப்பரங்குன்றம் மலையில் வேறு இடத்தில் தீபம் ஏற்ற வேண்டும் என்று தீர்மானித்தால், இந்து சமய அறநிலையத்துறையிடம் முன்அனுமதி பெற்று செய்யலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் எங்கேயும் மலை உச்சியில் உள்ள கல்தூணை குறிப்பிட்டு அங்கே தீபம் ஏற்றப்படவேண்டும் என்று 1996ஆம் ஆண்டு தீர்ப்பில் சொல்லப்படவில்லை.


image.png


2017ஆம் ஆண்டு கொடுக்கப்பட்ட தீர்ப்பிலும், 1996 தீர்ப்பின் படி தீபம் ஏற்ற வேண்டிய இடத்தை முடிவு செய்யும் உரிமை கோவில் நிர்வாகத்திற்கு மட்டுமே இருப்பதை உறுதி செய்து இந்த வழக்கை தள்ளுபடி செய்தது நீதிமன்றம். இதிலும், கல்தூணில் தீபம் ஏற்றவேண்டுமென்று எங்கும் சொல்லப்படவில்லை.



கடந்த டிசம்பர் ஒன்றாம் தேதி தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கொடுத்த தீர்ப்பில் மட்டுமே ‘தர்கா அருகில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும்’ என்று உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த தூண் தீபத்தூண் தான் என்பதற்கான போதிய ஆதாரங்கள் ஏதும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


மேற்கூறிய விவரங்களிலிருந்து, ஆங்கில தொலைச்காட்சி விவாதத்தில் ஆனந்த் ரங்கநாதன் கல்தூணில் தீபம் ஏற்றுவதை பழைய நீதிமன்ற தீர்ப்புகள் அங்கீகரிப்பதாக சொல்வது தவறான தகவல் என்பது உறுதியாகிறது.


முடிவு:


1931, 1996, 2017 ஆகிய ஆண்டுகளின் பழைய நீதிமன்ற தீர்ப்புகள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள கல்தூணில்  தீபம் ஏற்றுவதை அங்கீகரிப்பதாக ஆனந்த் ரங்கநாதன் தவறான கருத்துகளை பரப்பிவருகிறார். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க