YouTurn

திமுகவினர் ஆம்புலன்ஸில் நடனமாடியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

திமுகவினர் ஆம்புலன்ஸில் நடனமாடியதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இது ஒரு வாரத்திற்கு முன்னர் அரசு நடமாடும் மருத்துவ வாகனத்தில் அதில் வேலை செய்யும் ஊழியர்கள் நடனமாடியதாக வெளியிடப்பட்ட செய்தி வீடியோவாகும்.

பரவிய செய்தி

‘கரூர் சம்பவம் நடைபெற்ற தினத்தில் திமுகவினர் சிலர் ஆம்புலன்ஸ்-குள் நடனமாடுகிறார்கள்!



X Link | Archive Link 

விரிவான விளக்கம்

சமீபத்தில் கட்சிகளின் பிரச்சார கூட்டங்கள் நடக்கும் போது, அதனை இடையூறு செய்வதற்காக வேண்டுமென்றே ஆம்புலன்ஸ் விடப்படுவதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உட்பட சிலர் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். தவெக கட்சியினரும் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்கள். கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த போது கூட, தவெகவினர் ஆம்புலன்ஸை வழி மறித்து அதன் ஓட்டுநரை தாக்கியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

 

இந்நிலையில், ஆம்புலன்ஸ் போன்ற வாகனத்திற்குள் சிலர் நடனமாடிக் கொண்டிருக்கும் வீடியோவைப் பதிவிட்டு, ‘கரூர் சம்பவம் நடைபெற்ற தினத்தில் திமுகவினர் சிலர் ஆம்புலன்ஸ்-குள் நடனமாடிக் கொண்டிருந்ததாகவும்’, இவ்வாறு திமுக ஆம்புலன்ஸை வைத்து நாடகமாடுவதாகவும் சமூக வலைதளத்தில் பரப்பப்படுகிறது.

 

Youtube Link:


உண்மை என்ன?

 

பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘பாலிமர் செய்திகள்’ யூடியூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.


 

கடந்த செப்டம்பர் 21ஆம் தேதியன்று வெளியிடப்பட்டுள்ள அந்த செய்தியின் படி, அது ஆம்புலன்ஸ் இல்லை, நடமாடும் மருத்துவமனை வாகனம் என்பதும், அதில் நடனமாடியவர்கள் அதில் வேலை பார்க்கும் ஊழியர்கள் என்பதும் தெரிய வருகிறது.

 

இதே செய்தியை ‘தந்தி டிவி’-யும் வெளியிட்டுள்ளது. அதில் ‘திருநெல்வேலி வள்ளியூரிலிருந்து நாங்குநேரி செல்லும் வழியில் அரசு நடமாடும் மருத்துவ வாகனத்தில் ஊழியர்கள் நடனம் ஆடியதாக’ குறிப்பிடப்படுள்ளது.


 

மேற்குறிப்பிட்ட விவரங்களிலிருந்து, இந்த வீடியோவில் இருப்பது ஆம்புலன்ஸ் அல்ல, நடமாடும் மருத்துவ வாகனம் என்பதும், அதில் நடனமாடியவர்கள் திமுகவினர் அல்ல அந்த மருத்துவ வாகனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் என்பதும் தெரியவருகிறது. மேலும் இது ஒரு வாரத்திற்கு முன்பே நடந்த செய்தி என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

முடிவு:

 

மருத்துவ வாகனத்தில் ஊழியர்கள் நடனமாடிய ஒரு வாரம் பழைய செய்தி வீடியோவை, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் நடந்த நாளில் திமுகவினர் ஆம்புலன்ஸில் நடனமாடியதாக தவறாக பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க