YouTurn

உதயநிதி ஸ்டாலினை அவமதிக்கும் விதமாக அவர் மீது பொருள் வீசப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

உதயநிதி ஸ்டாலினை அவமதிக்கும் விதமாக அவர் மீது பொருள் வீசப்பட்டதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ கோவை ரோடு ஷோவின் போது தவெக தலைவர் விஜய் மீது தொப்பி வீசப்பட்ட சம்பவத்தின் போது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

கோவையில் துணை முதல்வருக்கு கிடைத்த மரியாதை 


image.png


Link / Archive Link


image.png


Link / Archive Link

விரிவான விளக்கம்

கடந்த ஏப்ரல் 27ஆம் தேதியன்று கோவை ஆர்.எஸ்.புரத்தில் அமையவுள்ள உலகத்தரம் வாய்ந்த ஹாக்கி மைதானத்திற்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்க சென்றார் துணை முதல்வர் உதயநிதி. அப்போது அவர் ரோடு ஷோ போன்று பிரச்சார வாகனத்தில் நின்றபடி சென்றார். 


இந்நிலையில், கோவையில் தொண்டர்கள் சூழ ரோடு ஷோ சென்ற போது, உதயநிதி ஸ்டாலினை அவமதிக்கும் விதமாக அவர் மீது யாரோ பொருளை வீசியதாக சமூக வலைத்தளத்தில் பாஜகவினரால் பரப்பப்படுகிறது.




உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’News 18 தமிழ்நாடு’ செய்தித் தொலைக்காட்சியின் சமூக வலைத்தளப் பக்கத்தில் இதுகுறித்த செய்தி ஒன்றைக் காணமுடிந்தது.



அதன் படி, ‘கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தவெக தலைவர் விஜய் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்திற்காக கோவை வருகை தந்தார். அப்போது தொண்டர் சூழ பிரச்சார வானத்தில் ரோடு ஷோ சென்றபோது தொண்டர்கள் விஜய் மீது கட்சி துண்டுகளை வீசி வரவேற்ப்பளித்தனர். அப்போது யாரோ ஒருவர் விஜயை நோக்கி தொப்பியை (Cap) வீசியதாக’ தெரியவருகிறது.


image.png


மேலும் தேடியதில், ‘Galatta Tamil’ யூட்யூப் தளத்தில் ‘கோவையில் நடந்த Road Show-வில் விஜய் மீது வீசப்பட்ட மர்ம பொருள்’ என்ற தலைப்பில் ஒரு செய்தியைக் காணமுடிகிறது. ‘ரோடு ஷோ’வில் விஜய் மீது தொப்பி வீசப்பட்டது அந்த வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது. 


மேற்கூறிய ஆதாரங்களிலிருந்து, இந்த வீடியோ கோவை ரோடு ஷோவில் விஜய் மீது தொப்பி வீசப்பட்ட சம்பவம் என்பது நிரூபணமாகிறது.


முடிவு:


கோவை ரோடு ஷோவில் விஜய் மீது தொப்பி வீசப்பட்ட வீடியோவை பதிவிட்டு, உதயநிதி ஸ்டாலினை அவமதிக்கும் விதமாக பொருள் வீசப்பட்டதாக பாஜகவினரால் தவறாக பரப்புகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.