YouTurn

ஈரானில் தற்போது பள்ளி மாணவிகள் ஹிஜாப்பை கழற்றி போராட்டம் செய்வதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

ஈரானில் தற்போது பள்ளி மாணவிகள் ஹிஜாப்பை கழற்றி போராட்டம் செய்வதாக பரப்பப்படும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 'மஹ்ஸா அமினி’ என்ற பெண் ஈரான் நாட்டின் ஒழுக்கப் போலீஸாரால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது.

பரவிய செய்தி

ஈரானில் பள்ளி செல்லும் மாணவிகள் தங்களின் ஹிஜாப்பை கழட்டி எறிந்து விட்டு சர்வாதிகாரிக்கும், அடக்குமுறை இஸ்லாமிய ஆட்சிக்கும் முடிவு கட்டவும் என்று முழக்கமிடுகின்றனர்.


image.png


Link / Archive Link 


விரிவான விளக்கம்

இஸ்ரேல் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்நிலையில் ஜீன் 13ஆம் தேதியன்று, ஈரானின் அணு சோதனைச் சாலைகள் மற்றும் இராணுவத்தளங்களை இஸ்ரேல் தாக்கியது. அதில் ஈரானின் அணு விஞ்ஞானிகளும் இராணுவ உயர்மட்டத் தலைவர்களும் கொல்லப்பட்டார்கள். இதனால் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் போக்கு தீவிரமானது. 

இந்நிலையில் பெண்கள் ஹிஜாப்பை கழற்றி கோஷமிடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ஈரானில் சர்வாதிகார ஆட்சி நடந்து வருவதாகவும், அதனைக் கண்டித்து பள்ளி மாணவிகள் தங்களின் ஹிஜாப்பை கழட்டி எறிந்து முழக்கமிடுவதாகவும் பாஜகவினரால் சமூக வலைத்தளதில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Daily Mail’ செய்தித்தளத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகியிருந் செய்தியில், இந்த வீடியோவைக் காணமுடிந்தது.



'மஹ்ஸா அமினி' என்ற 22 வயது இளம்பெண்ணின் கொலையை கண்டித்து ஈரான் முழுவதும் போராட்டம் வெடித்ததாகவும், பள்ளி மாணவிகளும் இந்த போராட்டத்தில் பரவலாக கலந்துகொண்டதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. 


இதனைத் தொடர்ந்து  'மஹ்ஸா அமினி' கொலை செய்யப்பட்டது குறித்து தேடினோம். ’AL JAZEERA’  செய்தித்தளத்தில் வெளியான செய்தியின்படி, கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், 'மஹ்ஸா அமினி' ஹிஜாப் சரியான முறையில் அணியாததற்காக ஈரான் நாட்டின் ஒழுக்கப் போலீஸாரால் (morality police) கைது செய்யப்பட்டார். சில நாட்கள் சென்று, அவர் போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கும் போதே இறந்துவிட்டதாக சொல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ’மஹ்ஸா அமினி’ ஈரான் ஒழுக்கப் போலீஸாரால் கொலை செய்யப்பட்டதாக சொல்லி நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்றது.


image.png


பிரபல நடிகைகள் தங்களது முடியை வெட்டிகொள்வதன் மூலமாகவும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளித்தார்கள்.


இந்த நிலையில்தான், ஈரானில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவிகள், ஈரான் அரசு திணிக்கும் கலாச்சார கட்டுப்பாடுகளை எதிர்க்கும் வண்ணம் தங்களது ஹிஜாப்பை கழற்றி எறிந்து ”சர்வாதிகாரி ஒழிக” என்று முழக்கமிட்டார்கள்.


அப்போது (அதாவது 2022ஆம் ஆண்டு) எடுக்கப்பட்ட வீடியோவை பகிர்ந்து தற்போது இந்த போராட்டம் நடப்பதாக பாஜகவினர் தவறாக பரப்புகின்றனர். 


முடிவு:


கடந்த 2022ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 'மஹ்ஸா அமினி’ என்ற பெண் ஈரான் நாட்டின் ஒழுக்கப் போலீஸாரால் கொலை செய்யப்பட்டதை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது. அதனை தற்போது நடந்ததாக  பாஜகவினர் தவறாக பரப்புகின்றனர். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க