யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
‘உண்மையான குங்குமப்பூ மற்றும் போலியை எப்படி கண்டுபிடிப்பது’ என்பதை விளக்கும் வீடியோவின் முதல் பாதியை மட்டும் பதிவிட்டு, தவறான அர்த்தத்தில் பரப்புகிறார்கள்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மக்காச்சோளத்தின் நாரை எடுத்து அதில் சாயமடித்து சிறிது சிறிதாக வெட்டி குங்குமப்பூ போன்று மாற்றும் வீடியோவைப் பகிர்ந்து, இப்படித்தான் போலியாக குங்குமப்பூ தயாரிக்கப்படுவதாக சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவில், ‘குங்குமப்பூ தயாரிக்க அவர்கள் என்ன பயன்படுத்துகிறார்கள் என்று பாருங்கள்’ என்று பெர்ஷ்யன் மொழியில் எழுதப்பட்டிருப்பதை காண்கிறோம். மேலும், வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘Saffron sobh’ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.

அந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘இந்த Saffron sobh என்பது குங்குமப்பூ தயாரிப்பதிலும் விற்பனை செய்வதிலும் நிபுணத்துவம் பெற்ற நிறுவனம்’ என்று பெர்ஷ்யன் மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவை முழுமையாக பார்த்தால், மக்காக்சோளத்தின் நாரை சாயமடித்து குங்குமப்பூ போன்ற வெட்டி அதை தண்ணீரில் கரைக்கிறார். இந்த சாயமடிக்கப்பட்ட மக்காக்சோளத்தின் நாரையிலிருந்து எந்தவித நிறமும் தண்ணீரில் கலக்கவில்லை. அதேபோல குங்குமப்பூவை தண்ணீரில் கரைக்கும் போது, தண்ணீர் நிறம் மாறுகிறது. இதன் மூலம் உண்மையான குங்குமப்பூவிற்கும் போலிக்கும் இடையிலான வித்தியாசத்தை கண்டுபிடிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.
இந்த வீடியோவின் முதல் பாதியை மட்டுமே சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, குங்குமப்பூ மக்காச்சோள நாரிலிருந்து தயாரிக்கப்படுவதாக தவறான அர்த்தத்தில் பரப்பப்படுகிறது.
முடிவு:
‘உண்மையான குங்குமப்பூ மற்றும் போலியை எப்படி கண்டுபிடிப்பது’ என்பதை விளக்கும் வீடியோவின் முதல் பாதியை மட்டும் பதிவிட்டு, மக்காச்சோளத்தின் நாரில் சாயமடித்து குங்குமப்பூ போலியாக தயாரிக்கப்படுவதாக தவறான அர்த்தத்தில் பரப்புகிறார்கள்.
