YouTurn

பெரியாரிய இயக்கத்தினரே மூட நம்பிக்கையை கடைபிடிப்பதாக பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

பெரியாரிய இயக்கத்தினரே மூட நம்பிக்கையை கடைபிடிப்பதாக பரப்பப்படும் செய்தி! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

மக்கள் மத்தியில் நிலவி வரும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் என்ற பிரச்சார நோக்கத்துடன் நடத்தப்பட்ட பேரணியின் போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

சந்தி சிரிக்கும் சுயமரியாதை வீதி உலா!

image.png


Link 

விரிவான விளக்கம்

கருப்பு உடையணிந்த பெண்கள் அலகு குத்திக்கொண்டு பெரியாரின் புகைப்படத்துடன் ஊர்வலம் செல்லும் 17 நொடிகள் வீடியோவை பதிவிட்டு, ‘சந்தி சிரிக்கும் சுயமரியாதை வீதி உலா’ என்ற தலைப்பில் ‘Gem Televisión’ என்ற யூடியூப் தளம் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது, பகுத்தறிவு பேசும் பெரியாரிய சிந்தனையாளர்களே இவ்வாறு மூடநம்பிக்கைகளை கடைபிடிக்கிறார்கள் என்ற தொனியில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு தேடுகையில், ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ இயக்கத்தின் பேஸ்புக் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.


image.png


‘பெண்களே தலைமை ஏற்று நடத்திய நாத்திகர் விழா ! மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி !’ என்ற தலைப்புடன் இந்த வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. 


மேலும் தேடியதில், திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பாக சேலத்தில் நடத்தப்பட்ட இந்த மூடநம்பிக்கை ஒழிப்பு பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்த செய்தியையும் காணமுடிகிறது. 


இவ்வாறு, மக்கள் மத்தியில் நிலவி வரும் மூடநம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் என்ற பிரச்சார நோக்கத்துடன் ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ இயக்கத்தின் சார்பாக ‘மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி’ நடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ இது.


முடிவு: 


மூடநம்பிக்கைகளை ஒழிக்கவேண்டும் என்ற பிரச்சார நோக்கத்துடன் ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ நடத்திய ‘மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி’யில் எடுக்கப்பட்ட வீடியோவை திரித்து பெரியாரிய சிந்தனையாளர்களே மூட நம்பிக்கைகளை கடைபிடிக்கிறார்கள் என்ற தொனியில் செய்தியாக வெளியிட்டிருக்கிறார்கள். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.