YouTurn

இஸ்லாமிய நாட்டில் பெண்களை சங்கிலியில் கட்டி விற்பனைக்கு அழைத்துச் செல்வதாக பரவும் எடிட் செய்த படம் !

இஸ்லாமிய நாட்டில் பெண்களை சங்கிலியில் கட்டி விற்பனைக்கு அழைத்துச் செல்வதாக பரவும் எடிட் செய்த படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இஸ்லாமிய நாடுகளில் பெண்களை சங்கிலியால் பூட்டி சந்தையில் விற்பனைச் செய்ய இழுத்து வரும் காட்சி.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ஈரான் நாட்டில் ஹிஜாப் அணிவதற்கு எதிராக பெண்கள் முன்னெடுக்கும் தொடர் போராட்டங்களால் அந்நாட்டில் ஹிஜாப் கண்காணிப்பு பிரிவு கலைக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகின. ஈரானின் ஹிஜாப் விவகாரம் உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், இஸ்லாமிய நாடுகளில் பெண்களை சங்கிலியால் பூட்டி சந்தையில் விற்பனைச் செய்ய இழுத்து வரும் காட்சி எனக் கூறி மூன்று பெண்களை ஒரு ஆண் சங்கிலியில் பூட்டி இழுத்து செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. 



உண்மை என்ன ? 

இஸ்லாமிய பெண்களை சங்கிலியால் பூட்டி அழைத்துச் செல்லப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2021 marca எனும் இணையதளத்தில் ஆப்கானிஸ்தான் பெண்களை சங்கிலியில் பூட்டி அழைத்து செல்லும் புகைப்படம் போலியானது என வெளியான செய்தியில் உள்ள புகைப்படத்தில் சங்கிலி இடம்பெறவில்லை. 



2014-ம் ஆண்டு 50 shades of gray hair எனும் இணையதளத்திலும் வெளியான படத்தில் பெண்கள் சங்கிலி இல்லாமலேயே நடந்து செல்வது இடம்பெற்று இருக்கிறது.



2014 ஜனவரி 1ம் தேதி வெளியான " Female infanticide : Between sacred texts and the masculine complex " என்ற புத்தகத்தின் அட்டைப் படத்தில் ஹிஜாப் அணிந்த பெண்கள் நடந்து செல்லும் இப்புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.





வைரல் செய்யப்படும் புகைப்படம் 2003ம் ஆண்டு ஈராக் நாட்டில் இருந்து Murat Duzyol எனும் புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டது. இந்த படம் எடிட் செய்யப்பட்டு ஆப்கானிஸ்தான் நாட்டில் எடுக்கப்பட்டதாகவும் தவறாக பரப்பப்பட்டது.

மேலும் படிக்க : அரபு நாட்டில் பெண்களை விற்பனை செய்யும் சந்தையா ?| உண்மை என்ன?

இதற்கு முன்பாக, அரசு நாட்டில் பெண்களை விற்கும் சந்தை என ஐஎஸ் பயங்கரவாதிகளுக்கு எதிராக பெண்களை பாலியல் அடிமையாக ஏலம் விட்டு நடத்திய நாடகத்தை தவறாக பரப்பி இருந்தனர்.

மேலும் படிக்க : ஆப்கானில் பெண்களை விற்பதாகவும், சாலையில் சுட்டுக் கொல்வதாக பரவும் பழைய வீடியோக்கள் !

முடிவு : 

நம் தேடலில், இஸ்லாமிய நாடுகளில் பெண்களை சங்கிலியால் பூட்டி சந்தையில் விற்பனைச் செய்ய இழுத்து வரும் காட்சி எனப் பரப்பப்படும் புகைப்படம் தவறானது. ஹிஜாப் அணிந்த பெண்கள் சாலையில் நடந்து செல்லும் காட்சியை எடிட் செய்து வதந்தியை பரப்பி வருகிறார்கள் என அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தூய்மை பணியாளர்களுக்கு ஓய்வு அறை ஏற்படுத்தி கொடுத்துள்ள முதலமைச்சர் விஜய் என்று பொய் செய்தி பரப்பும் தவெகவினர்!

சென்னையில் தூய்மைப் பணியாளர்களுக்கு 300 சதுர அடியில் கழிப்பறை வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படும் என்று முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் நவம்பர் 15, 2025 அன்ற…

தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க