YouTurn

தமிழகத்தில் ஐ.எஸ் அமைப்பால் ஹெச்.ஐ.வி வைரஸ் பரப்பப்படுகிறதா ?

தமிழகத்தில் ஐ.எஸ் அமைப்பால் ஹெச்.ஐ.வி வைரஸ் பரப்பப்படுகிறதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு மருத்துவக் கல்லுரியின் மாணவர்கள் எனக் கூறி வருபவர்கள் இலவசமாக இரத்த பரிசோதனை செய்வதாக ஹெச்.ஐ.வி உள்ளிட்ட வைரஸ்களை பரப்பி வருவதாகவும், அவர்கள் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என காவல்துறை எச்சரிக்கை செய்து உள்ளதாக ஃபார்வர்டு செய்தி ஒன்று தமிழக காவல்துறையின் லோகோ உடன் சமூக...

பரவிய செய்தி

எச்சரிக்கை .. யாராவது உங்கள் வீட்டு வாசலுக்கு வந்து நாங்கள் மருத்துவக் கல்லூரியில் இருந்து வருகிறோம். உங்கள் இரத்தத்தில் சுகர் இருக்கிறதா என இலவசமாகப் பரிசோதனை செய்து தருகின்றோம் எனக் கூறினால் உடனடியாக விரட்டுங்கள் அல்லது போலீசில் பிடித்து கொடுங்கள். அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் எச்.ஐ.வி எயிட்ஸ் வைரசைப் பரப்புவதற்காக அனுப்பி வைக்கப்பட்டவர்கள்.

விரிவான விளக்கம்

தமிழகத்தில் உள்ள வீடுகளுக்கு மருத்துவக் கல்லுரியின் மாணவர்கள் எனக் கூறி வருபவர்கள் இலவசமாக இரத்த பரிசோதனை செய்வதாக ஹெச்.ஐ.வி உள்ளிட்ட வைரஸ்களை பரப்பி வருவதாகவும், அவர்கள் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவர்கள் என காவல்துறை எச்சரிக்கை செய்து உள்ளதாக ஃபார்வர்டு செய்தி ஒன்று தமிழக காவல்துறையின் லோகோ உடன் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.



ஐஎஸ் அமைப்பு தொடர்பாக பரப்பப்படும் ஃபார்வர்டு செய்தி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பரப்பப்பட்டு இருந்துள்ளது. ஆக, சில ஆண்டுகளாகவே தமிழ்நாடு காவல்துறை எச்சரிக்கை என ஒரே ஃபார்வர்டு செய்தி பரப்பப்பட்டு வந்துள்ளது.



Facebook link | archived link 

ஆனால், சமீபத்திலோ அல்லது கடந்த சில ஆண்டுகளுக்கு முன்போ பயங்கரவாதிகள் தொடர்பாக காவல்துறை எந்தவொரு எச்சரிக்கை தகவலையும் வெளியிடவில்லை என்பதே உண்மை. இதுபோன்ற செய்திகளில் அடிப்படை ஆதாரமே இல்லை என்பதை எளிதாக புரிந்து கொள்ளலாம். ஏனெனில், பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களின் செயல்பாட்டை அரசாங்கம் நேரடியாக எச்சரிக்கை செய்து விழிப்புணர்வை ஏற்படுத்தி இருப்பார்கள்.



Twitter link | archived link 

சமீபத்தில் சென்னை மாநகர காவல்துறை எனும் முகநூல் மற்றும் ட்விட்டர் பக்கத்தில், " மேற்குறிப்பிட்ட செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. ஆகவே, இந்த செய்தியை யாரும் நம்ப வேண்டாம். இத்தகைய அறிவிப்பை தமிழக காவல்துறை வெளியிடவில்லை " எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், 2017 டிசம்பர் மாதம் இந்தியா டுடே வெளியிட்ட கட்டுரையில், " மருத்துவ மாணவர்கள் பெயரில் பயங்கரவாதிகள் எயிட்ஸ் வைரஸை பரப்பி வருவதாக பரவி வரும் வாட்ஸ் அப் ஃபார்வர்டு செய்தி குறித்து உத்தரப் பிரதேச மாநில காவல்துறை போலியான தகவலை நம்ப வேண்டாம் என அறிவுறுத்தியதாக " வெளியாகி இருக்கிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…