
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
மேலும் அதில், "மூன்று நாட்கள் அவர்களுடைய இடத்தில் இருந்தேன். உணவு உட்பட எதுவுமே கொடுக்கவில்லை. பிறகு கொஞ்சம் உணவும் சமைத்த மாமிசமும் கொண்டுவந்து வைத்தார்கள். பசிமிகுதியால் நான் அதை தின்று விட்டேன். அதன் பிறகு தான் சொன்னார்கள் உன் தட்டில் இருந்த மாமிசம் உன் ஒரு வயது ஆண் குழந்தையின் மாமிசம் என்று. மேலும் ஒரு பத்து வயது பெண் குழந்தையை வன்புணர்வு செய்து அவளை பெற்றோர் முன் வைத்து கொன்று விட்டார்கள்." என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஹமாஸ் இஸ்லாமிய தீவிரவாதிகளிடம் இருந்து தப்பிய இந்த இஸ்ரேலிய பெண் கூறுவது :.மாமிசமும் கொண்டு வைத்தார்கள். பசிமிகுதியால் நான் அதை தின்று விட்டேன் .சொன்னார்கள் உன் தட்டில் இருந்த மாமிசம் உன் ஒரு வயது ஆண் குழந்தயின் மாமிசம் என்று ..இவர்களை நல்லவர்கள்
என்று I.N.D.I.A கூட்டணி ஆதரிக்கி pic.twitter.com/ROnfhDkdsD
— Senthilkumar Balasubramaniam (@Senthil91764466) October 19, 2023
Archive Link:
உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது இஸ்ரேல் பாலஸ்தீனப் போர் தொடர்புடைய வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
இதன் 4:31 நிமிடங்கள் கொண்ட முழு வீடியோ "The Middle East Media Research Institute (MEMRI)" என்ற பேஸ்ஃபுக் பக்கத்தில் கடந்த 2017 ஜூன் 26 அன்று வெளியிடப்பட்டிருந்தது. அந்தப் பதிவில், "ஈராக்கைச் சேர்ந்த யாசிதி மக்களின் எம்பியான வியான் டாகில் தனது மக்களுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் நடத்திய அட்டூழியங்களை எண்ணி கண்ணீர் விட்டு அழுதார் என்றுள்ளது.
அந்த நிகழ்ச்சியில் ஐஎஸ்ஐஎஸ் நடத்திய சில அட்டூழியங்களையும் விவரித்தார்: "நாங்கள் தொடர்ந்து கேட்கும் கேள்வி என்பது: ஏன் எங்களுக்கு இவ்வாறு நடக்கிறது என்பது தான்?" ஜூன் 2 நேர்காணலின் போதே, டாகில் மற்றும் எக்ஸ்ட்ரா நியூஸ் டிவியில் நேர்காணல் செய்த தொகுப்பாளர் என இருவரும் அழுதனர். மேலும் அதில் சுமார் 6,900 யாசிதி பெண்கள், இளம் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் ஐஎஸ்ஐஎஸ்-ஆல் கடத்தப்பட்டனர், அதில் 4-10 வயதுடைய சிறுவர்களும் இருந்தனர். அந்த சிறுவர்கள் தாயிடமிருந்து பறிக்கப்பட்டு, மூளைச்சலவை செய்யப்பட்டு தற்கொலைத் தாக்குதல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் " என அவர் கூறினார் என்றுள்ளது.
Yazidi Iraqi MP Vian Dakhil Breaks Down in Tears Recounting Atrocities Committed by ISIS against Her People pic.twitter.com/T69GXmfLn8
— MEMRI (@MEMRIReports) June 26, 2017
இந்த வீடியோ MEMRI உடைய அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் கடந்த 2017 ஜூன் 26 அன்று பதிவு செய்யப்பட்டிருந்ததையும் காண முடிந்தது. அதில் "யாசிதி மக்களின் ஈராக் எம்பியான வியான் டாகில் தனது மக்களுக்கு எதிராக ஐஎஸ்ஐஎஸ் நடத்திய அட்டூழியங்களை எண்ணி கண்ணீர் விட்டு அழுதார்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் இராணுவத்தினரை கொல்லும் காட்சி எனப் பழைய ஐஎஸ்ஐஎஸ் வீடியோவைப் பகிர்ந்த இந்து மக்கள் கட்சி !
மேலும் படிக்க: ‘இஸ்ரேல்-பாலஸ்தீனப் போர்’: இந்தியாவில் வலதுசாரிகள் பரப்பிய வதந்திகளின் தொகுப்பு !
முடிவு:
நம் தேடலில், ஹமாஸ் அமைப்பினர் தாங்கள் கடத்தி வைத்திருந்த இஸ்ரேல் பெண்ணிற்கு அவரின் ஒரு வயது மகனை கொன்று சமைத்து கொடுத்துள்ளனர் என்று கூறி பரவும் வீடியோ தவறானது. அது கடந்த 2017-ல் ஈராக்கில் உள்ள யசிதி பெண்கள் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரால் கடத்தப்பட்ட போது நடந்த சம்பவம் குறித்து ஈராக் எம்பியான ‘வியான் டாகில்’ ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை அறிய முடிகிறது.