YouTurn

ஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா?

ஜக்கி, காஜல் அகர்வாலுக்கு முத்தமா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

கோவை ஈஷா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம்.நேற்று இரவு நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் கலந்து கொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்களும் பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அதில் ஜக்கி வாசுதேவ் நடிகை காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்ததாக ஒரு...

பரவிய செய்தி

ஈஷா யோகா மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவ் நடிகை காஜல் அகர்வாலுக்கு முத்தம் !

விரிவான விளக்கம்

கோவை ஈஷா மையத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி பிரமாண்டமாக கொண்டாடப்படுவது வழக்கம்.நேற்று இரவு நடந்த சிறப்பு நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் கலந்து கொண்டார். பல்லாயிரக்கணக்கான மக்களும் பிரபலங்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அதில் ஜக்கி வாசுதேவ் நடிகை காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்ததாக ஒரு புகைப்படம் வைரலாகி வருகிறது. அதை குறித்து நாம் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட வீடியோவில் பார்க்கையில் இது தவறாக செய்தி என அறிய முடிந்தது. ஜக்கி வாசுதேவ் அவரின் கம்மலை காட்டி ஏதோ பேசுகிறார் அங்கு அதிக சத்தமாக இருந்ததால் காஜலுக்கு சரியாக கேட்கவில்லை. அதனால் அவர் அருகில் சென்று கேட்டு தன் காதில் இருக்கும் கம்மலை தொட்டு பார்த்து பிறகு சிரித்து கொண்டே பதிலளித்தது தெளிவாக தெரிகிறது.
வீடியோ கீழே :

[video width="720" height="1280" mp4="https://d2y0rn4f1ve9hm.cloudfront.net/2019/03/WhatsApp-Video-2019-03-05-at-2.05.02-PM-1.mp4"][/video]

எனவே ஜக்கி வாசுதேவ் நடிகை காஜல் அகர்வாலுக்கு முத்தம் கொடுத்ததாக பரவும் செய்தி உண்மை இல்லை.

சுருக்கமாக

முழு வீடியோ பார்க்கையில் தவறென தெரிகிறது. பேசுகிறார்களே தவிர முத்தம் கொடுக்கவில்லை.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.