YouTurn

சவுதி அரேபியா பள்ளி பாடத்திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம் சேர்க்கப்பட்டதாகப் பரவும் பொய் !

சவுதி அரேபியா பள்ளி பாடத்திட்டத்தில் இராமாயணம், மகாபாரதம் சேர்க்கப்பட்டதாகப் பரவும் பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சவுதி அரேபியாவில் உள்ள பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களும் ராமாயணம் மகாபாரதம் ஆகிய பாடங்களை பயில்வார்கள். மெக்கா மதினா போன்ற புனித நகரங்களில் படிக்கும் மாணவர்களும் இனி ராமாயணம் மகாபாரதம் படிக்கப் போகிறார்கள்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

யோத்தியில் ஜனவரி 22 அன்று ராமர் கோவில் திறப்பு விழா நடைபெற்றது. திறப்பு விழாவை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாகவே ராமர் குறித்தும், ராமாயணம் தொடர்பாகவும் பல செய்திகள் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பரவி வருகின்றன.

இந்நிலையில், சவுதி அரேபியாப் பள்ளிகளில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் கற்பிக்கப்படுகிறது என்று கூறி, ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவது போன்ற புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.

மேலும் அப்பதிவுகளில், "சவுதி அரேபியாவில் மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டத்தில் ராமாயணம், மகாபாரதம் சேர்க்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவின் மாணவர்கள் இப்போது புதிய பாடத்திட்டத்தின் கீழ் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இந்து இதிகாசங்களின் விவரங்களையும் கற்றுக்கொள்வார்கள்." என்றும் கூறப்பட்டுள்ளது. இதை கடந்த 2021ம் ஆண்டில் இருந்தே இந்தியா டுடே , நியூஸ் 18 , வியான் , ரிபப்ளிக் டிவி , யாஹோ இந்தி டிவி 9, ஏபிபி கல்வி , தி காஷ்மீரியத் மற்றும் ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டுள்ளன.





உண்மை என்ன ?

பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்ததில், கடந்த 2021ல், பத்மஸ்ரீ விருதாளரும், சவுதி அரேபியாவில் அரபு யோகா அறக்கட்டளையை நடத்தி வருபவருமான "நௌஃப் அல் மர்வாய்" தனது எக்ஸ் பக்கத்தில் முதன் முதலில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் தான், இந்த செய்தி கடந்த 2021-ல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளது.



இது தொடர்பாக "சவுதி விஷன் 2030" பாடத்திட்டம் குறித்து ஏப்ரல் 25, 2016 அன்று இளவரசர் முகமது பின் சல்மான் அவர்களால் வெளியிடப்பட்ட அறிவிப்புகளை ஆய்வு செய்து பார்த்தோம். அதில், ராமாயாணம், மகாபாரதம் போன்ற இந்துமதம் தொடர்பான இதிகாசங்கள் எதுவும், சவுதி அரேபிய அரசின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதற்கான எந்தவொரு அறிவிப்புகளும் இல்லை.

மேலும் புதிய பாடத்திட்டத்தில், சவுதி அரேபியாவின் பொருளாதாரத்தை பல்வகைப்படுத்துவது, சுகாதாரம், கல்வி, உள்கட்டமைப்பு, பொழுதுபோக்கு மற்றும் சுற்றுலா போன்ற பொது சேவைத் துறைகளை மேம்படுத்துவது தொடர்பான பாடத்திட்டங்களே சேர்க்கப்பட்டுள்ளன என்பதையும் அறிய முடிந்தது.



இது தொடர்பான எக்ஸ் பதிவிற்கு 2021ல் சவுதி அரேபிய ஆசிரியரான 'உமர் அல்-சபியின்'  பதிலளிக்கையில், நான் 25 ஆண்டுகளாக இங்கு ஆசிரியராக இருக்கிறேன். சவுதி அரேபியாவின் பொதுக் கல்வியில், ஆங்கிலப்பாடத்தைத் தவிர மற்ற பாடங்களின் வினாக்கள் எல்லாம், அரேபிய மொழியிலேயே இருக்கும், ஆங்கில மொழியில் எந்த வினாக்களும் கேட்கப்படுவதில்லை. அதற்கு தடையும் உள்ளது. ஆனால் நீங்கள் பதிவு செய்துள்ள இந்தக் கேள்விகள் ஆங்கிலத்தில் உள்ளன. இது இங்கு இயங்கும் இந்தியப் பள்ளிகளில் வெளியிடப்பட்ட வினாக்களாக இருக்கும் என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்ததையும் காண முடிந்தது. 



மேலும் நௌஃப் அல் மர்வாய் பதிவு செய்துள்ள மற்றொரு பதிவில், தனது மகன் ஒரு சர்வதேச பள்ளியில் படிக்கிறார் என்றும், கேள்விகள் சவுதி அரேபியாவில் உள்ள கல்வி அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்டு அவர்களின் பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன என்றும் தெளிவுபடுத்தினார். மேலும் சவுதி அரேபிய அரசின் தேசிய பாடத்திட்டத்தை இது பிரதிபலிக்கவில்லை என்றும் அவர் சந்தேகத்திற்கு இடமின்றி கூறியுள்ளார்.



இதன் மூலம் சவுதி அரேபியாவில் உள்ள சர்வதேச பள்ளி ஒன்றில் மகாபாரதம் மற்றும் ராமாயணம் தொடர்பான பாடங்கள் குறித்து கேட்கப்பட்ட வினாத்தாள் ஒன்றின் புகைப்படம், சவுதி அரேபிய அரசின் பாடத் திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறி சமூக ஊடகங்களில் கடந்த 2021-ல் இருந்து தவறாக பரவி வந்துள்ளது என்பதை உறுதிபடுத்த முடிகிறது.

மேலும் இது தொடர்பாக, சமூக ஊடகங்களில் ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி, சவுதி அரேபியாவைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருடன் சேர்ந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவது போன்று பரவும் புகைப்படம், 1,75,000 யாத்ரீகர்களை இந்தியாவிலிருந்து ஹஜ் யாத்திரைக்கு கூட்டி செல்வது தொடர்பாக ஜனவரி 08, 2024 அன்று வெளியிடப்பட்ட செய்தி தொடர்பானது என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: அண்டார்டிகாவில் ராமர் பிராண பிரதிஷ்டை கொண்டாட்டம் என எடிட் செய்த படத்தை வெளியிட்ட தினமலர் !

முடிவு:

நம் தேடலில், சவுதி அரேபிய அரசின் பாடத் திட்டத்தில் ராமாயணம் மற்றும் மகாபாரதம் சேர்க்கப்பட்டுள்ளது என்று கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதையும், இது சவுதியில் தனியாருக்கு சொந்தமாக உள்ள ஒரு சர்வதேச பள்ளி ஒன்றின் பாடத்திட்டமே தவிர, சவுதி அரேபிய அரசின் விஷன் 2030 திட்டத்தின் அங்கமாக தேசிய பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க