YouTurn

அடுத்த தலைமுறை நடிகர்களில் 'பிரதீப் ரங்கநாதன்' முதலிடம் எனப் பரவும் நியூஸ் கார்டு.. உண்மை என்ன?

அடுத்த தலைமுறை நடிகர்களில் 'பிரதீப் ரங்கநாதன்' முதலிடம் எனப் பரவும் நியூஸ் கார்டு.. உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

55.5% சதவீதத்துடன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முதலிடம் எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது. தந்தி டிவியின் உண்மையான டிஜிட்டல் சர்வே முடிவில் நடிகர் சிவகார்த்திகேயனே முதலிடத்தில் உள்ளார்.

பரவிய செய்தி

அடுத்த தலைமுறை தமிழ் சினிமா ஹீரோக்களில் அதிக எதிர்பார்ப்பை தருபவர்கள் யார்? – தந்தி TV டிஜிட்டல் சர்வே.


பிரதீப் ரங்கநாதன் – 55.5%; சிவகார்த்திகேயன் – 22.1%; துருவ் விக்ரம் – 16.5%; அஷோக் செல்வன் – 5.8%;



X Link | Archive Link

விரிவான விளக்கம்

“அடுத்த தலைமுறை தமிழ் சினிமா ஹீரோக்களில் அதிக எதிர்பார்ப்பை தருபவர்கள் யார்?” என்ற  தந்தி டிவியின் டிஜிட்டல் சர்வே முடிவில், “55.5% சதவீதத்துடன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முதலிடம், இதில் சிவகார்த்திகேயன் – 22.1%; துருவ் விக்ரம் – 16.5%; அஷோக் செல்வன் – 5.8%” என்று குறிப்பிட்டு தந்தி டிவி ஊடகத்தின் நியூஸ் கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.


#EXCLUSIVE : Thanthi TV Digital Survey on the Most Promising Next-Generation Tamil Cinema Heroes✌💥

1. @pradeeponelife – 55.5%
2. @Siva_Kartikeyan – 22.1%
3. @DhruvVikram5 – 16.5%
4. @AshokSelvan – 5.8%

Pradeep anna leading🥵🥵🥵
#Dude #Parasakthi #Bison pic.twitter.com/804h9W06NZ

— Kamalesh (@Pradeep__Stan) November 16, 2025


#EXCLUSIVE : Thanthi TV Digital Survey on the Most Promising Next-Generation Tamil Cinema Heroes✌✌💥

1. Pradeep ranganathan – 55.5%
2. Sivakarthikeyan – 22.1%
3. Dhruv Vikram – 16.5%
4. Ashok Selvan – 5.8%
#Dude #Parasakthi #Bison pic.twitter.com/WcGkteZFm5

— Movie Buff (@moviesbuff_) November 17, 2025


உண்மை என்ன?


பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து ஆய்வு செய்ததில், இது உண்மையான நியூஸ் கார்டு அல்ல என்பதை அறிய முடிந்தது. 


நவம்பர் 16 அன்று ‘தந்தி டிவி’ ஊடகம் இது குறித்து வெளியிட்டுள்ள செய்தியில், 55.5% சதவீதத்துடன் நடிகர் சிவகார்த்திகேயனே முதலிடத்தில் உள்ளார். அதைத் தொடர்ந்தே பிரதீப் ரங்கநாதன் 22.1% சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், அசோக் செல்வன் 5.8 சதவீதத்துடனும், துருவ விக்ரம் 5.8 சதவீதத்துடனும் முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 


#ThanthiTvDigitalSurvey #tamilcinema #Sivakarthikeyan #ashokselvan #DhruvVikram #ThanthiTV pic.twitter.com/FKDoL0hSA1

— Thanthi TV (@ThanthiTV) November 16, 2025


மேலும் இதே போன்று, "தமிழ் சினிமா இசையில் தற்போது யார் ஆட்சி நடக்கிறது?" என்று குறிப்பிட்டு தமிழ் சினிமாவின் மற்ற துறைகள் குறித்தும் தந்தி டிவி சர்வே முடிவுகளை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


#Thanthitvdigitalsurvey #Trendingmusicdirector #kollywoodmusician #ThanthiTV #Anirudh #GVPrakashkumar #SaiAbhyankkar #Santhoshnarayanan pic.twitter.com/xxVoIJMPyx

— Thanthi TV (@ThanthiTV) November 15, 2025


இந்நிலையில் "அடுத்த தலைமுறை தமிழ் சினிமா ஹீரோக்களில் அதிக எதிர்பார்ப்பை தருபவர்கள் யார்?” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தந்தி டிவி ஊடகத்தின் உண்மையான நியூஸ் கார்டை எடிட் செய்து, பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருகின்றனர். 



முடிவு: 


நம் தேடலில், ‘தமிழ் சினிமாவின் அடுத்த தலைமுறை ஹீரோக்களில் யார் நம்பிக்கை தருகிறார்கள்’ என்ற தந்தி டிவியின் டிஜிட்டல் சர்வே முடிவில், 55.5% சதவீதத்துடன் நடிகர் பிரதீப் ரங்கநாதன் முதலிடம் எனப் பரவும் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க