YouTurn

கூகுள் தலைமையகம் ஒரு தீவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்தள்ளதா? உண்மை என்ன?

கூகுள் தலைமையகம் ஒரு தீவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைந்தள்ளதா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

கூகுள் நிறுவனத்தின் தலைமையகம், கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மவுண்டன் வியூவ் என்ற நகரத்தில் அமைந்துள்ளது. இது தீவுப் பகுதியும் அல்ல. இங்கே அடர்ந்த காடும் இல்லை.

பரவிய செய்தி

"கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஒரு தீவில் அடர்ந்த காட்டு பகுதியில் இருக்கிறது.. அங்கே தீப்பற்றி எரிந்து விடக்கூடாது என்பதற்காக 100 மாடுகளை விட்டு புற்களை மேய விடுகிறார்கள்..." - சீமான்


image.png


Link

விரிவான விளக்கம்

’மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை’ என்ற முழக்கத்தோடு தேனியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் ஒரு தீவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கிறது.. அங்கே தீப்பற்றி எரிந்து விடக்கூடாது என்பதற்காக 100 மாடுகளை விட்டு புற்களை மேய விடுகிறார்கள்” என்று கூறுகிறார்.


உண்மை என்ன? 


கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் குறித்து தேடியதில், ’Clay’ என்ற இணையத்தில் அது குறித்த விவரங்களைக் காண முடிந்தது. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மவுண்டன் வியூவ் (Mountain View) என்ற நகரத்தில் கூகுள் நிறுவனத்தின் தலைமை அலுவலகத்தில் உள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

image.png


இந்த ’மவுண்டன் வியூவ்’ நகரம் குறித்து தேடியதில், ‘City of Mountain View’ என்ற வலைத்தளத்தில் இந்த நகரம் “சாண்டா குரூஸ் மலைகள் மற்றும் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாவிற்கு இடையில் அமைந்திருப்பதாக” குறிப்பிடப்பட்டுள்ளது. இது தீவுப்பகுதி அல்ல என்பது தெளிவாகிறது. மேலும், இந்த நகரத்தின் அருகில் அடர்ந்த காடு ஏதும் இருப்பதாக குறிப்பிடப்படுவில்லை. மேலும் அடர்ந்த காடு இருக்கும் இடத்தில் இதுபோன்ற மிகப்பெரும் கட்டுமானங்கள் கட்டப்பட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.


image.png


கூகுள் நிறுவனத்திற்கு உலகில் பல்வேறு நாடுகளில் அலுவலகங்களும், தரவு மையங்களும் (Data Centers) இருக்கிறது. அதில் ஏதாவது ஒன்று தீவுப் பகுதி அல்லது அடர்ந்த காட்டுப் பகுதியில் இருக்கிறதா என்று தேடினோம். ‘Our locations’ என்ற கூகுள் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் உலகம் முழுவதும் அந்நிறுவனத்திற்கு உள்ள அலுவலகங்கள், தரவு மையங்கள் ஆகியற்றின் இருப்பிடம் பற்றிய வரைபடம் இடம்பெற்றிருக்கிறது. அதில் எந்த அலுவலகமும் தீவில் இருக்கவில்லை என்பதைக் காண்கிறோம். 

image.png


மேலும், கூகுள் நிறுவனம் மாடுகளை மேய்ச்சல் செய்வது பற்றி தேடினோம். ‘Search engine journal’ என்ற வலைத்தளத்தில் உள்ள செய்தியின் படி, 2009ஆம் ஆண்டிலிருந்தே கூகுள் நிறுவனம் 200 ஆடுகளை ஒப்பந்த அடிப்படையில் கொண்டு வந்து அதன் தலைமையக வளாகத்தின் உள்ளே வளரும் புற்களையும் களைச்செடிகளையும் மேயவிடுவதாக தெரியவருகிறது. இந்த நடைமுறையை ‘யாஹூ’ நிறுவனம் 2007ஆம் ஆண்டிலிருந்தே செயல்படுத்தி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 


image.png


ஆனால், இந்த நடைமுறையை சீமான் சொல்வது போல் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக இந்த நிறுவனங்கள் கடைபிடிக்கவில்லை, மாறாக கரிஅமில உமிழ்வுகளை (carbon emission) குறைப்பதற்காகவே இதனை செய்வதாக சொல்லப்படுகிறது.


முடிவு:


கூகுள் நிறுவனத்தின் தலைமையகம், ஒரு தீவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சொல்வது தவறான தகவல் ஆகும். மேலும், கரிஅமில உமிழ்வுகளை (carbon emission) குறைப்பதற்காக ஆடுகளை ஒப்பந்த அடிப்படையில் கொண்டு வந்து வளாகத்தில் மேய்ச்சல் செய்யப்படுவதை திரித்து, காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் நோக்கத்திற்காக செய்யப்படுவதாக தவறாக கூறுகிறார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க