YouTurn

தவெக மாநாட்டில் இளைஞர்களைக் கவர ஆடல் பாடல் நிகழ்ச்சியா? உண்மை என்ன?

தவெக மாநாட்டில் இளைஞர்களைக் கவர ஆடல் பாடல் நிகழ்ச்சியா? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்த வீடியோ, சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற குலசேகரன்பட்டணத்தின் தசரா திருவிழாவில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்டது.

பரவிய செய்தி

மாநாட்டுக்கு வரும் இளைஞர்களை கவர நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு மாநாட்டு பந்தல் அருகில் ஒத்திகை..

நீ மாநாடு நடத்த போறீயா இல்ல ஆடல் பாடல் நிகழ்ச்சி எதும் நடத்த போறீயா உண்மைய சொல்லிடு @BussyAnand

#தமிழகவெற்றிக்கழகம்



X Link

விரிவான விளக்கம்

நடிகர் விஜய் தொடங்கியுள்ள புதிய கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதுபற்றி சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. 


இந்நிலையில், பெண்கள் சிலர் நடனமாடும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, ’தவெக’வின் மாநாட்டுக்கு வரும் இளைஞர்களை கவர ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடைபெறுவதாக சமூக வலைதளமான 'எக்ஸ்' தளத்தில் பரப்பப்படுகிறது.


https://x.com/i/web/status/1850017153753415798


உண்மை என்ன? 


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில், ’Naveen prabhu’ என்ற யூட்யூப் தளத்தில் இதே வீடியோ காணக் கிடைத்தது. அந்த வீடியோவின் தலைப்பில் ’குலசை தசரா 2024’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டணத்தில் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா என்பது மிக பிரலமானதாகும். இந்த ஆண்டு (2024) தசரா திருவிழா அக்டோபர் 3ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இதனையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. அவற்றில் ஆடல்பாடல் நிகழ்ச்சியும் ஒன்றாகும்.


தசரா விழாவின்போது நடந்த ஆடலும் பாடலும் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோ அக்டோபர் 18ஆம் தேதி யூட்யூப் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 


அந்த வீடியோவின் சிறுபகுதியை பதிவிட்டு, தமிழக வெற்றிக் கழக மாநாட்டிற்கென ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கான ஒத்திகை நடப்பதாக தவறாக பரப்பப்படுகிறது.


முடிவு:


இந்த வீடியோ, தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் நடக்கவிருக்கும் ஆடல் பாடல் நிகழ்ச்சிகான ஒத்திகையின்போது எடுக்கப்பட்டது என்று பரப்பப்படும் தகவல் பொய்யானது. இந்த ஆண்டு குலசேகரன்பட்டணத்தின் தசரா திருவிழாவில் நடந்த ஆடல் பாடல் நிகழ்ச்சியின்போது எடுக்கப்பட்ட வீடியோ இது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க