யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
அமெரிக்க ராணுவக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல் எனப் பரவும் வீடியோ கடந்த 2016-ஆம் ஆண்டு ஹவாய் தீவுக்கு அருகே நடைபெற்ற பசிபிக் பெருங்கடல் பயிற்சியின் (RIMPAC 2016) போது எடுக்கப்பட்ட வீடியோ.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மத்தியக் கிழக்கு போர்ச்சூழலில் சமாதானப் பேச்சுவார்த்தை மேற்கொள்ளபட்டிருந்த நிலையில், அண்மையில் ஈரான் ஐக்கிய அரபு மீது மேற்கொண்ட தாக்குதலை அந்நாட்டு படையினர் தடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அதேபோன்று ஹோர்மூஸ் நீரிணையை கடக்க முயன்ற அமெரிக்க கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த தாக்குதலின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ ஒன்று பரப்பப்பட்டு வருகிறது.
உண்மை என்ன?
முதலில் ஈரானினால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை தாக்குதல் தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் வெளியான செய்திகளை பார்த்த போது, அதில் எங்கும் பரவி வீடியோ வெளியாகியிருக்கவில்லை.
இதையடுத்து பரவி வீடியோவின் screenshotகளை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது CNN ஊடகத்தின் யுட்யூப் பக்கத்தில், 2016 ஆம் ஆண்டு பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியாகிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் ஹவாய் தீவுகளின் கடற்கரைக்கு அப்பால் நடைபெற்ற கூட்டு இராணுவப் பயிற்சியின் போது, USS Thach போர்க்கப்பல் கடுமையாகத் தாக்கப்பட்டது என குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடியப் போது, AiirSource Military ஊடகத்தின் யுட்யூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோ பகிரப்பட்டிருந்தது. அதில் 2016-ஆம் ஆண்டு பசிபிக் பெருங்கடல் பயிற்சியின் (RIMPAC 2016) போது, பணியிலிருந்து ஓய்வுபெற்ற USS Thach (FFG 43) கப்பலை மூழ்கடிக்கும் பயிற்சி என குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் அதில் ஹவாய் தீவுகளின் கடற்கரைக்கு அப்பால் இந்தப் பயிற்சி நடைபெற்றது. இதில் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் இராணுவப் படைகள் இணைந்து, தங்களின் ஏவுகணைகள் மற்றும் டார்பிடோக்களின்(Torpedoes) துல்லியத்தை சோதித்துப் பார்த்தன. வானிலிருந்தும், கடலில் இருந்தும், கடலுக்கு அடியிலிருந்தும் (நீர்முழ்கிக் கப்பல் மூலம்) இந்தக் கப்பல் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தப்பட்டது. கடுமையான தாக்குதல்களுக்குப் பிறகும், இந்தக் கப்பல் உடனடியாக மூழ்காமல் சுமார் 12 மணிநேரம் தாக்குப்பிடித்தது. இறுதியில் கடலில் மூழ்கடிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
முடிவு:
கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, அமெரிக்க ராணுவக் கப்பல் மீது ஈரான் ஏவுகணைகள் தாக்குதல் எனப் பரவும் வீடியோ கடந்த 2016-ஆம் ஆண்டு ஹவாய் தீவுக்கு அருகே நடைபெற்ற பசிபிக் பெருங்கடல் பயிற்சியின் (RIMPAC 2016) போது எடுக்கப்பட்ட வீடியோ. இந்த பழைய தற்போது தவறாகப் பரப்பி வருகின்றனர்.
