YouTurn

உலகம் முழுவதும் இன்டர்நெட் 48 மணி நேரம் முடங்குகிறதா ?

உலகம் முழுவதும் இன்டர்நெட் 48 மணி நேரம் முடங்குகிறதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உலகம் முழுவதும் இன்டர்நெட் சேவை 48 மணி நேரத்திற்கு முடங்குவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இன்டர்நெட் சேவை இன்றி உலகம் எவ்வாறு இருக்கும் எனவும், இன்டர்நெட் சேவை முடங்குவதால் என்ன நிகழும் என்று மக்கள் அச்சம் கொள்கின்றனர். ஆனால், உண்மையில் இன்டர்நெட் சேவை உலகம் முழுவதும் முடங்குவதாக கூறுவது தவறான...

பரவிய செய்தி

அடுத்த 48 மணி நேரத்திற்கு உலகம் முழுவதும் இன்டர்நெட் முடங்குகிறது.

விரிவான விளக்கம்

உலகம் முழுவதும் இன்டர்நெட் சேவை 48 மணி நேரத்திற்கு முடங்குவதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இன்டர்நெட் சேவை இன்றி உலகம் எவ்வாறு இருக்கும் எனவும், இன்டர்நெட் சேவை முடங்குவதால் என்ன நிகழும் என்று மக்கள் அச்சம் கொள்கின்றனர். ஆனால், உண்மையில் இன்டர்நெட் சேவை உலகம் முழுவதும் முடங்குவதாக கூறுவது தவறான தகவல்.



Internet corporation of Assigned name and number(ICANN),  Domain name மற்றும் IP Address பதிவு செய்தலின் பராமரிப்பு பொறுப்பு கொண்ட அமைப்பு, Domain name system அல்லது internet address book பாதுகாக்க உதவும் cryptographic key-ஐ மாற்ற உள்ளனர்.

cryptographic key மாற்றும் செயல்முறையால் இன்டர்நெட் உள்கட்டமைப்புக்கு வரும் அச்சறுத்தல்களுக்கு முடிவாக இருக்கும் என கூறுகின்றனர்.



ஏற்கனவே ICANN தொடக்கநிலை சோதனை மூலம் key மாற்றும் செயல்முறையில் சிறிதளவு பிரச்சனைகள் மட்டுமே இருக்கும் என காண்பித்துள்ளனர். இதற்கான பணிகள் 11 அக்டோபர் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்கி உள்ளது. இன்று அதிகாலை மூன்று மணியளவில் ஒரு செய்தியை ICANN இணையத்தளத்தில் பதிவிட்டு உள்ளார்கள். அதில், Rollover ஆரம்பித்த முதல் 6 மணி நேரத்திற்கு சில பிரச்சனைகள் உருவாகியது. எனினும், பெரும்பான்மையானவை உடனடியாக சரி செய்யப்பட்டது என்று குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், ICANN வலைத்தளத்திலோ அல்லது சமூக வலைத்தளத்திலோ அடுத்த 48 மணி நேரத்திற்கு இன்டர்நெட் சேவை முடங்கும் என கூறவில்லை.

இந்த பணியின் போது உங்களின் இன்டர்நெட் load ஆவது மெதுவாக இருக்க வாய்ப்புள்ளது. அதற்காக முடங்கியது என்று அர்த்தமில்லை. உலகம் முழுவதும் ஒரே நேரத்தில் இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டால் அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகம். ஆகையால், இன்டர்நெட் முடங்கும் என்றால் முன்னரே முக்கிய அறிவிப்பாக வெளியாகி இருக்கும்.

சுருக்கமாக

Domain name மற்றும் IP Address பதிவு செய்தலின் பராமரிப்பு பொறுப்பு கொண்ட ICANN அமைப்பு, Domain name system அல்லது internet address book பாதுகாக்க உதவும் cryptographic key-ஐ மாற்றுகின்றனர். இதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை, இதற்கான முக்கிய மென்பொருள் ஏற்கனவே அப்டேட் செய்யப்பட்டதாக கூறியுள்ளனர்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க