YouTurn

கிட்சனில் கேஸ் எரியும் போது பூச்சி மருந்து ஸ்ப்ரேக்களை பயன்படுத்த வேண்டாம் !

கிட்சனில் கேஸ் எரியும் போது பூச்சி மருந்து ஸ்ப்ரேக்களை பயன்படுத்த வேண்டாம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

உண்மை

பரவிய செய்தி


#எச்சரிக்கைப்பதிவு..!! ஒரு பெண் தன் சமையல் அறையில் கியாஸ் (Gas Stove ) அடுப்பில்



சமையல் செய்து கொண்டு இருக்கும் போது பக்கத்தில் பாத்திரம் கழுவும் இடத்தில் சில

கரப்பான் பூச்சிகளைக் கண்டாள்.. உடனே அவள் பூச்சிக் கொல்லி ("Hit","Mortein") மருந்தை அடித்து தெளித்தாள். அந்த மருந்தின் வேகத்தால் கியாஸ் சிலிண்டர் வெடித்து அவள் மேல் 65% தீக்காயம் ஏற்பட்டது. அவளைக் காப்பாற்ற முயன்ற கணவர் மீதும் தீக்காயம் ஏற்பட்டது.



இருவரும் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டனர். கணவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் அந்த பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்து போனாள். அவள் இறந்தது கூட கணவனுக்கு தெரியாது. அதனால் எரிவாயு எரிந்து கொண்டு இருக்கும் போது பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்க வேண்டாம் என்று எச்சரிக்கப் படுகிறது. இந்த செய்தியை படித்ததோடு விட்டுவிடாமல் மற்றவர்களும் தெரிந்து கொள்ளபகிர்ந்து விழிப்புணர்வை தந்திடுங்கள்..




விரிவான விளக்கம்

கேஸ் அடுப்பில் சமைக்கும் போது சிங்கு அருகே சுற்றித் திரிந்த கரப்பான் பூச்சிகளைக் கொல்ல ஸ்ப்ரே மூலம் பூச்சி மருந்தை பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டு கணவன் மனைவி இருவருக்கும் தீக்காயம் ஏற்பட்டதாக ஓர் உதாரணத்துடன் சமையல் அறையில் நெருப்பு இருக்கும் போது பூச்சிகளை கொல்லும் ஸ்ப்ரேக்களை பயன்படுத்த வேண்டாம் என மக்களுக்கு எச்சரிக்கும் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

வைரல் செய்யப்படும் பதிவில் உதாரணத்திற்கு கூறப்பட்ட கதை கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பகிரப்பட்டு வருகிறது. எனினும், அது தொடர்பான தகவல்கள் கிடைக்கவில்லை.



ஆனால், " காசியாபாத் நகரில் உள்ள அபார்ட்மென்ட் வீட்டின் சமையல் அறையில் எரியக்கூடிய பூச்சிக் கொல்லி ஸ்ப்ரே தீ பிடித்ததால் 27 வயதான மனைவிக்கு 40% தீக்காயம் ஏற்பட்டதாகவும், கணவனும் சிறிய தீக்காயத்தால் பாதிக்கப்பட்டதாக " 2018-ல் வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா செய்தியில் கூறப்பட்டுள்ளது.

பல கம்ப்ரெஸ் செய்யப்பட்ட கேஸ் தயாரிப்புகள் போலவே வீட்டில் இருக்கும் பூச்சிகளை கொல்லும் ஸ்ப்ரேக்களும் பொதுவாக நெருப்பு, தீப்பொறிகள் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க எச்சரிக்கை செய்யும் எச்சரிக்கை குறியீடுகளுடன் வருகின்றன. அவற்றை குளிர்ந்த அல்லது உலர் பகுதியில் வைக்க வேண்டும் மற்றும் காலியான பிறகு தீயில் போடுவது தவிர்க்க வேண்டும் போன்ற எச்சரிக்கையும் உள்ளன.





பொதுவான விதி என்னவென்றால், நீங்கள் பயன்படுத்துவதற்காக இரசாயன தயாரிப்புகளை(ஸ்ப்ரே டைப்) வாங்கும் போது அதன் விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பாதுகாப்பு வழிகாட்டுதல்களை படித்து பின்பற்ற வேண்டும். அலட்சியமாக இருத்தல் கூடாது.

முடிவு :

நம் தேடலில், சமையல் அறையில் கேஸ் உள்ளிட்ட நெருப்பு பயன்பாட்டில் இருக்கும் போது பூச்சிக் கொல்லி மருந்து ஸ்ப்ரே அடிப்பது தீ பிடிக்கும் வகையில் ஆபத்தானது என பகிரப்படும் தகவல் உண்மையே. எனினும், உதாரணமாக சொல்லப்பட்டு இருக்கும் சம்பவம் எங்கு நிகழ்ந்தது எனத் தெரியவில்லை. இருப்பினும், அதுபோன்ற தீ விபத்து சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கின்றன.

சமையல் அறையில் பூச்சிக் கொல்லி ஸ்ப்ரேக்களை கவனமாக கையாள வேண்டும். அதுமட்டுமின்றி, கேஸை வெளியேற்றும் ஸ்ப்ரேக்களின் எச்சரிக்கை தகவல் மற்றும் குறியீடுகளை அறிந்து பயன்படுத்தவும்.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க