YouTurn

நேபாள கலவர வீடியோ எனப் பரவும் இந்தோனேஷிய வீடியோ!

நேபாள கலவர வீடியோ எனப் பரவும் இந்தோனேஷிய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தோனேஷியாவில் சமீபத்தில் பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் காவல்துறை வாகனம் மோதி இறந்ததால், அங்கு போராட்டம் தீவிரமடைந்தது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை, நேபாள கலவரத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

அராஜகம் செய்யும் ஒவ்வொரு அரசுக்கும் இது எச்சரிக்கை மணி.. மக்கள் புரட்சி.. நேபாளம் வன்முறை..



Facebook Link: 

விரிவான விளக்கம்

நேபாளத்தில் சமூக ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து தொடங்கிய போராட்டம், ஊழல் எதிர்ப்பாகவும் மாறி அங்கு கிளர்ச்சியை ஏற்படுத்தியது. பின்பு அங்கு வன்முறை வெடித்து பிரதமர் இல்லம், நாடாளுமன்ற கட்டடங்கள் உட்பட பல முக்கிய இடங்கள் தாக்கப்பட்டன. தற்போது இடைக்கால பிரதமராக அந்நாட்டின் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி பதவி ஏற்றுள்ளார்.


இந்நிலையில் நேபாள கலவரத்தில் காவல்துறையினரை தாக்கும் போராட்டக்காரர்கள் என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், பரவி வரும் இதே வீடியோ இந்தோனேஷியாவில் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டிருந்தது



மேலும் தேடியதில் , பரவி வரும் வீடியோ ‘’TIMES PRESS” ஊடகப் பக்கத்தில் “இந்தோனேசியாவில் சட்டமன்ற உறுப்பினர்கள் 50 மில்லியன் ரூபாய் (சுமார் 3,000–5,000 அமெரிக்க டாலர்கள்) வரை மாதந்தோறும் வீட்டுவசதி உதவித்தொகை பெறுவதாகக் கூறி ஊழல் செய்துள்ளனர். இந்த ஊழல் அம்பலப்படுத்தப்பட்டதை அடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்“ என்று குறிப்பிட்டு கடந்த செப்டம்பர் 03 அன்றுபதிவு செய்யப்பட்டிருந்ததைக் காண முடிந்தது. 



இதே போன்று “BBC” ஊடகப் பக்கத்திலும், “இந்தோனேஷியாவில் சமீபத்தில் பைக் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் காவல்துறை வாகனம் மோதி இறந்ததால், அங்கு போராட்டம் தீவிரமடைந்தது “ என்று குறிப்பிட்டு செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 



இதன் மூலம் இந்தோனேசியாவில் எடுக்கப்பட்ட வீடியோவை, நேபாள கலவரத்தோடு தொடர்புபடுத்தி தவறாகப் பரப்பியுள்ளயுள்ளனர் என்பது தெளிவாகிறது. 


முடிவு: 


நம் தேடலில், நேபாள கலவரத்தில் காவல்துறையினரை தாக்கும் போராட்டக்காரர்கள் என்று கூறி பரவும் வீடியோ, இந்தோனேஷியாவில் நடந்த போராட்டத்தோடு தொடர்புடைய வீடியோ என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க