YouTurn

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு எனத் தவறாகப் பரவும் கணினி சித்தரிப்பு வீடியோ !

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடிப்பு எனத் தவறாகப் பரவும் கணினி சித்தரிப்பு வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்த காட்சி மொபைல் இருட்டியபின் 15 வினாடி காத்திருக்கவும்.



Twitter link 

விரிவான விளக்கம்

இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை ஒன்று வெடித்த காட்சி என வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. வீடியோவில் வரும் கரும்புகை திரையை இருட்டாக்கியதும் 15 வினாடிகள் காத்திருக்கவும் என அப்பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படித் திரை இருட்டிய பிறகான 15வது வினாடிக்குப் பிறகு அந்த எரிமலை வெடித்து அந்த இடமே சாம்பல் மண்டலமாக மாறுகிறது.





உண்மை என்ன ? 

பரப்பப்படும் வீடியோவை கவனிக்கையில் அது கணினி தொழில்நுட்பம் கொண்டு உருவாக்கப்பட்டது என்பதை அறிய முடிகிறது. அந்த வீடியோ உருவாக்கப்பட்டதின் நோக்கம் குறித்து இணையத்தில் தேடினோம். 



அவ்வீடியோ Auckland War Memorial Museum என்ற யூடியூப் பக்கத்தில் 2019, டிசம்பர் 19ம் தேதி, Auckland Museum Volcano Simulation - Auckland Museum” என்ற தலைப்பில் வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. அவ்வீடியோ நிலைத்தகவலில்(description) எரிமலை வெடிப்பினால் ஏற்படும் நிலநடுக்கம் பற்றிக் கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட வீடியோ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அந்த வீடியோ குறித்துத் தேடியதில், 2017ம் ஆண்டு, அக்டோபர் மாதம் 11ம் தேதி 'Express' என்ற இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. “நீருக்கடியில் உள்ள எரிமலை வெடித்தால் என்னவாகும்? பேரழிவை வெளிக்காட்டும் வீடியோ” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



அதில், ஆஸ்திரேலிய புவியலாளர்கள் நியூசிலாந்தில் உள்ள எரிமலை குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். அவர்கள் நியூசிலாந்தில், ஆக்லாந்து  (Auckland) என்ற பகுதியில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்தால் எம்மாதிரியான பாதிப்பு ஏற்படும் என்பதை விளக்கும் வகையில் அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது. 

கடலுக்கு அடியிலுள்ள எரிமலை வெடித்தால், அதனால் ஏற்படும் அதிர்வு மற்றும் எரிமலை வெப்பத்தினால் அருகிலுள்ள நிலப்பகுதியின் செழுமை அழிதல் போன்றவற்றை விளக்கவே அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது.

முடிவு : 

நம் தேடலில், இந்தோனேசியாவில் கடலுக்கு அடியில் எரிமலை வெடித்த காட்சி எனப் பரவும் வீடியோ உண்மையல்ல. அது நியூசிலாந்தில் கடலுக்கு அடியில் உள்ள எரிமலை வெடித்தால் எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை விளக்க புவியியல் ஆய்வாளர்களால் கணினி தொழில் நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

கர்நாடகாவில் கல்லூரி மாணவர்களில் 7000 பேருக்கு HIV தொற்று ஏற்பட்டுள்ளதா? தமிழ் ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

கர்நாடகாவில் தற்போது 7000 மாணவர்கள் HIV வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுவது திரிக்கப்பட்ட தவறான செய்தி என்று கர்நாடக AIDS தடுப்பு அமைப்பு விளக்…

தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க