YouTurn

இந்தோனேசியாவில் விமான நிலைய அதிகாரியை அடித்தது இந்திய பெண்ணா ?

இந்தோனேசியாவில் விமான நிலைய அதிகாரியை அடித்தது இந்திய பெண்ணா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

சரிபார்க்கப்பட்ட கூற்று

Auj-e-Taqqaddas என்ற 42 வயது மதிப்புத்தக்க பிரித்தானிய பெண் ஒருவர் இந்தோனேசியாவின் பாலியில் உள்ள Ngurah Rai சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல தயாராக இருந்துள்ளார். விமானத்தில் செல்வதற்காக போர்டிங் பாஸ் பெற்ற பிறகு immigration அலுவலத்தில் சரிபார்க்கும் பொழுது அதிகாரிகளிடம்...

பரவிய செய்தி

இந்தோனேசியாவின் பாலி விமான நிலைய அலுவலகத்தில் வட இந்திய பெண் ஒருவர் பணியில் இருந்த அதிகாரி ஒருவரை கன்னத்தில் அறைந்ததால் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றுள்ளார். விமானத்திற்கு சரியான நேரத்திற்கு செல்ல அதிகாரிகள் அனுமதிக்காத காரணத்தினால் கோபத்தில் அதிகாரியை அறைந்துள்ளார். அவருக்கு ஜாமீனும் மறுக்கப்பட்டுள்ளது.

விரிவான விளக்கம்

Auj-e-Taqqaddas என்ற 42 வயது மதிப்புத்தக்க பிரித்தானிய பெண் ஒருவர் இந்தோனேசியாவின் பாலியில் உள்ள Ngurah Rai சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்ல தயாராக இருந்துள்ளார்.



விமானத்தில் செல்வதற்காக போர்டிங் பாஸ் பெற்ற பிறகு immigration அலுவலத்தில் சரிபார்க்கும் பொழுது அதிகாரிகளிடம் சிக்கிக் கொண்டுள்ளார். காரணம் அவரின் விசா காலம் முடிவடைந்து பல மாதங்கள் ஆகியுள்ளன. 19 ஜனவரி 2018-ல் இந்தோனேசியா வந்த Auj-e-Taqqaddas-விற்கு விசா பிப்ரவரி உடன் முடிந்துள்ளது.

சுமார் 160 நாட்களுக்கு மேலாக விசா காலம் முடிவடைந்தும் இந்தோனேசியாவில் தங்கி இருந்தது குற்றம் ஆகும். ஆகையால், அது தொடர்பாக அபராதம் மற்றும் தகுந்த நடவடிக்கை எடுக்கும் வரை அவர் காத்திருப்பது அவசியமான ஒன்றாக இருந்தது. ஒரு நாளைக்கு 25$ வீதம் 3000$-க்கும் மேல் அபராதம் செலுத்த வேண்டி இருந்தது.



இதற்கிடையில், அவர் சிங்கப்பூர் செல்ல இருந்த விமானத்தை தவற விட்டதால் கடும் கோபத்திற்கு ஆளாகி விமான நிலைய அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். எவ்வளவு பணம் என்று சொல் உடனே தருகிறேன் என்றும், கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி அதிகாரிகளை திட்டியதோடு அதிகாரி ஒருவரின் கன்னத்தில் அறைந்து உள்ளார்.

பிரித்தானிய பெண் சுற்றுலாப் பயணி நடந்தக் கொண்ட முறை அனைத்தும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. வீடியோ முழுவதும் கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி அவர்களின் பணியைப் பற்றியும், அவர்களையும் கடுமையாக திட்டியோடு அதிகாரிகளிடம் வன்முறையாக நடந்து கொண்டதால் தற்போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதிகாரியை கன்னத்தில் அறைந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளது. மேலும், வட இந்திய பெண் என்றுக் கூறி இந்த வீடியோ பதிவுகள் இந்தியாவில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.