YouTurn

இந்தியாவில் முதன் முதலில் இளைஞர் அணியை அமைத்தது திமுக கட்சியா ?

இந்தியாவில் முதன் முதலில் இளைஞர் அணியை அமைத்தது திமுக கட்சியா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு அரசியல் கட்சி இளைஞர் அணியை அமைத்தது திமுக தான்! 1980 ஜூலை 20 திமுக_இளைஞர்_அணி உருவாக்கப்பட்ட நாள் இன்று.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ஜூலை 20-ம் தேதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணி அமைக்கப்பட்ட நாள் அன்று திமுக ஆதரவாளர்கள் பலரும் பதிவிட்ட பதிவுகளில், இந்தியாவிலேயே முதன் முதலாக ஒரு அரசியல் கட்சி இளைஞர் அணியை அமைத்தது திமுக தான். 1980 ஜூலை 20 திமுக இளைஞர் அணி 1உருவாக்கப்பட்ட நாள் என பதிவிட்டு இருக்கிறார்கள்.







கடந்த சில ஆண்டுகளாவே, திமுக இளைஞர் அணி உருவாக்கப்பட்ட நாள் தொடர்பான பதிவுகளில் இதே தகவலை பகிர்ந்து வந்து உள்ளனர். ஆகையால், இதுகுறித்து ஆராய்ந்து பார்க்கத் தீர்மனித்தோம்.

உண்மை என்ன ?

அரசியல் கட்சிகள் தங்களுக்கென இளைஞர் அணி உள்ளிட்ட பல அணிகளை உருவாக்கி கொள்வது வழக்கம். ஆனால், இந்தியாவில் முதன் முதலில் இளைஞர் அணியை அமைத்த அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம் அல்ல. திமுகவிற்கு முன்பாகவே இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற கட்சிகளில் இளைஞர் அணி உருவாகி உள்ளது.

" இளைஞர் காங்கிரஸின் கொடி, லோகோ போன்றவற்றின் அடிப்படையில் இளைஞர் காங்கிரசின் உண்மையான வடிவம் 1950-க்கு பிறகு நடந்துள்ளது. 1965-ம் ஆண்டில் இருந்தே இளைஞர் காங்கிரஸ் நேரடியாக வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கு எதிராக நேரடி அரசியல் பாத்திரத்தை வகித்தது " என இந்திய இளைஞர் காங்கிரஸ் உடைய இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.



1978-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி வெளியான இந்தியா டுடே செய்தியில், " ஜனதா எம்.பி சுப்ரமணியன் சுவாமி ஆளும் கட்சியின் இளைஞர் பிரிவு என்று கூறி ஆர்.எஸ்.எஸ் நடத்தும் அமைப்பான ஜனதா யுவ மோர்ச்சாவை விட்டு விலக முடிவு செய்ததாக நம்பப்படுகிறது " என வெளியாகி இருக்கிறது.

மேலும் படிக்கமுதன்முதலில் சுற்றுச்சூழல் அணியை உருவாக்கியது திமுகவா, நாம் தமிழர் கட்சியா ?

இதற்கு முன்பாக, திராவிட முன்னேற்றக் கழகத்தில் சுற்றுசூழல் அணி தொடங்கப்பட்ட போதும் முதல் முறையாக சுற்றுச்சூழல் அணி தொடங்கப்பட்டதாக தவறான தகவலை பகிர்ந்தனர் என கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

முடிவு :

நம் தேடலில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு முன்பாக தேசிய அளவிலான அரசியல் கட்சிகளில் இளைஞர் அணி பிரிவு இருந்து இருக்கிறது. ஆகையால், இந்தியாவிலேயே முதன் முதலில் அரசியல் கட்சியில் இளைஞர் அணியை தொடங்கியது திமுக எனக் கூறுவது தவறான தகவல் என அறிய முடிகிறது.

கூடுதல் தகவல் :

இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய அளவிலான இளைஞர் அமைப்பான அனைத்து இந்திய இளைஞர் கூட்டமைப்பு(AIYF) 1959-ம் ஆண்டு மே 3-ம் தேதி தொடங்கப்பட்டு இருக்கிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க