
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
04 டிசம்பர் இந்திய கடற்படை தினம்#NavyDay2020 pic.twitter.com/KoiQ29xVok
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) December 4, 2020
Twitter archive link
விரிவான விளக்கம்

கடந்த 2015-ம் ஆண்டில் இருந்தே இப்போர் கப்பலின் புகைப்படம் இந்திய கடற்படை தினத்தின் போது பகிரப்பட்டு வருகிறது. இக்கப்பலின் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், " 2009-ம் ஆண்டு மே 7-ம் தேதி www.stripes.com இணையதளத்தில் " Navy taking steps to move toward irregular warfare " எனும் தலைப்பில் வெளியாகி இருக்கிறது. இது அமெரிக்க கடற்படையின் போர் கப்பலாகும்.

மேலும், wallpapercave.com எனும் இணையதளத்தில் வெளியான அமெரிக்க கடற்படை புகைப்படங்களின் தொகுப்பிலும் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. பாதுகாப்பு குறித்த செய்திகளை வெளியிடும் Livefist எனும் இணையதளம் 2019-ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் பக்கம் இதே புகைப்படத்தை பகிர்ந்த போது, இது அமெரிக்காவின் ஃப்ரீடம் க்ளாஸ் லிட்டோரல் காம்பாட் ஷிப் என ட்வீட் செய்து இருந்தது.

Archive link
2017-ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சியின் தலைமை ட்விட்டர் பக்கத்திலும், 2019-ம் ஆண்டு தூர்தர்சன் செய்தியின் ட்விட்டர் பக்கத்திலும் இதே புகைப்படத்தை பயன்படுத்தி வாழ்த்துக் கூறி ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், பல அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக வலைதளவாசிகளும் அமெரிக்க கப்பலின் புகைப்படத்தை பயன்படுத்தி வருகிறார்கள்.
Greetings on Indian Navy Day. Let’s wear Armed Forces flag with honour and pride. Contribute generously to the ‘#ArmedForcesFlagDay Fund’ to assure our soldiers that the entire nation cares for them & their families. https://t.co/sFwfNCgrcA pic.twitter.com/PHtqYm9QZU
— BJP (@BJP4India) December 4, 2017
Archive link
December 4 is celebrated as Navy Day to commemorate Operation Trident. Here are some interesting facts about the day. #IndianNavy #NavyDay #NavyDay2019 @indiannavy @DefenceMinIndia pic.twitter.com/AtVYNlTWaj
— DD News (@DDNewslive) December 4, 2019
Archive link