YouTurn

இந்திய முஸ்லீம்கள் தேசியக் கொடியை எரிப்பதாகப் பரப்பப்படும் பாகிஸ்தான் போராட்டப் படம் !

இந்திய முஸ்லீம்கள் தேசியக் கொடியை எரிப்பதாகப் பரப்பப்படும் பாகிஸ்தான் போராட்டப் படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இந்த மண்ணில் பிறந்து, இந்நாட்டில் வாழ்ந்து, பாரதம் தந்த அத்தனை பயன்களையும் அனுபவித்துக் கொண்டு தாய்நாட்டின் கொடியை ஒரு உண்மையான குடிமகனால் எரிக்க முடியாது.


விரிவான விளக்கம்

நபிகள் நாயகத்தை பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை  கைது செய்ய சொல்லி இந்திய தேசியக் கொடியை இந்திய முஸ்லீம்கள் எரித்ததாக இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.



Archive link



உண்மை என்ன ?   

வைரல் செய்யப்படும் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், ஜூன் 9-ம் தேதி இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தானில் நடைபெற்ற போராட்டத்தில் இந்திய தேசியக் கொடி எரிக்கப்பட்டதாக ஏபி நியூஸ் இணையதளத்தில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது.



இஸ்லாம் மற்றும் நபிகள் நாயகம் குறித்த சர்ச்சைக் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாகிஸ்தானின் லாஹூரில் இஸ்லாமிய அமைப்புகள் நடத்திய போராட்டத்தில் இந்திய கொடியை எரித்ததாகவும், புகைப்படம் ஏபி நியூஸ் தளத்தின் புகைப்பட கலைஞரால் எடுக்கப்பட்டது என்றும் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. புகைப்படத்தில் உள்ள பேனரில் " Ulama-e-nizamia pak " எனும் அமைப்பின் பெயர் இடம்பெற்று இருக்கிறது.

நுபுர் சர்மாவின் பேச்சுக்கு எதிராக பல நாடுகளில் நடைபெற்ற போராட்டங்கள் குறித்து அல்ஜசீரா செய்தியில் பாகிஸ்தான் போராட்டத்தில் எடுக்கப்பட்ட இப்புகைப்படமும் இடம்பெற்று உள்ளது.

முடிவு : 

நம் தேடலில், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட படத்தை வைத்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்ய சொல்லி தேசியக் கொடியை இந்திய முஸ்லீம்கள் எரிப்பதாகப் பொய்யான தகவல் பரப்பப்படுகிறது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீட…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க