YouTurn

இது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா ?

இது இந்திய விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை அல்ல| செங்கோட்டையில் பேரணி நடத்த திட்டமா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இது டிரைலர் தான். ஜனவரி26 தான் ஒரிஜினல் பேரணி.



Facebook link | Archive link

விரிவான விளக்கம்

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லைப் பகுதியில் ஒரு மாதங்களுக்கு மேலாக போராட்டத்தை நடத்தி வரும் விவசாயிகள் ஜனவரி 26-ம் தேதி இந்தியக் குடியரசு தினத்தில் செங்கோட்டை நோக்கி டிராக்டர் பேரணியை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்கான டிராக்டர் ஒத்திகை எனக் கூறி இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

ஜெகபர் அலி எனும் முகநூல் பக்கத்தில் விவசாயிகளை குறிப்பிட்டு வெளியிடப்பட்ட இப்பதிவு 3 ஆயிரத்திற்கும் மேல் ஷேர் ஆகி உள்ளது. இப்புகைப்படம் இந்திய அளவிலும் கூட விவசாயிகளின் டிராக்டர் பேரணி ஒத்திகை என பரவி வருகிறது.

உண்மை என்ன ? 

இந்திய விவசாயிகளை குறிப்பிட்டு பகிரப்படும் இப்புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், கடந்த 2019-ல் ஜெர்மனியின் தலைநகர் பெர்லினில் அந்நாட்டின் ஆயிரக்கணக்கான விவசாயிகள் ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய விவசாய கொள்கைகளுக்கு எதிராக நடத்திய போராட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என காண்பித்தன.



இந்தியக் குடியரசு தினத்தில் விவசாயிகள் நடத்தவுள்ள டிராக்டர் பேரணி குறித்து தேடுகையில், " ஜனவரி 26-ம் தேதி ஹரியானா-டெல்லி எல்லையில் மட்டுமே டிராக்டர் பேரணி திட்டமிட்டு உள்ளது மற்றும் மற்றவர்கள் கூறுவது போன்று செங்கோட்டை குடியரசுத்தின அணிவகுப்பில் நுழைவது தொடர்பாக விவசாயிகள் திட்டமிடவில்லை என விவசாயிகள் சங்கத் தலைவர் தெரிவித்து உள்ளார்.

" டிராக்டர் பேரணி குடியரசுத்தினத்தின் போது ஹரியானா-டெல்லி எல்லையில் மட்டுமே நடைபெறும், செங்கோட்டையில் நடக்கவில்லை என பாரதிய கிஷான் யூனியன் தலைவர் பல்பீர் சிங் ராஜிவால் கடிதத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு தெரிவித்து உள்ளதாக "  இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு : 

நம் தேடலில், குடியரசுத்தினத்தில் விவசாயிகள் நடத்தவுள்ள டிராக்டர் பேரணிக்கான ஒத்திகை என சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படம் 2019-ல் ஜெர்மனி விவசாயிகள் நடத்திய போராட்டத்தின் போது எடுக்கப்பபட்டது.

மேலும், இந்திய விவசாயிகள்குடியரசுத்தினத்தில் டெல்லி செங்கோட்டையில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதில்லை, மாறாக டெல்லி-ஹரியானா எல்லையில் நடத்த உள்ளதாகத் தெரிவித்து உள்ளனர் என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க