YouTurn

இந்திய தாக்குதலில் காயமடைந்த பாகிஸ்தான் வீரர்களின் வீடியோவா?

இந்திய தாக்குதலில் காயமடைந்த பாகிஸ்தான் வீரர்களின் வீடியோவா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவனத்தினர் வெள்ளைக் கொடியை ஏந்தியதாக மேற்காணும் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் முதலுதவி பெறுவதையும், இறந்தவர்களின் உடலை வெள்ளை துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளதையும் காண முடிந்தது...

பரவிய செய்தி

அடேய் பாகிஸ்தான் என்னடா ஒரே ஒரு மரண அடிக்கு இப்படி வெள்ளை கொடிய தூக்கிட்டு வரீங்க.



Facebook link | archive link 1 | archive 2

விரிவான விளக்கம்

இந்தியாவின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் ராணுவனத்தினர் வெள்ளைக் கொடியை ஏந்தியதாக  மேற்காணும் வீடியோ சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில், தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் முதலுதவி பெறுவதையும், இறந்தவர்களின் உடலை வெள்ளை துணியால் மூடி வைக்கப்பட்டுள்ளதையும் காண முடிந்தது. அங்கிருந்த வாகனத்தில் பாகிஸ்தான் நாட்டின் கொடி இடம்பெற்று இருக்கிறது.





இந்திய தேசிய ராணுவம் எனும் முகநூல் பக்கத்தில் வெளியான இவ்வீடியோ ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஷேர்களை பெற்று பல முகநூல் பக்கங்களிலும் வைரலாகி வருகிறது. இதன் உண்மைத்தன்மையை ஆராய்ந்து பார்க்க தீர்மானித்தோம்.

உண்மை என்ன ? 

பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் காயத்துடன் இருக்கும் வீடியோவில் இருந்து ஸ்க்ரீன்ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், 2011 நவம்பர் 18-ம் தேதி www.military.com எனும் இணைதளத்தில் தலிபான்கள் தாக்கியதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக இவ்வீடியோ பதிவாகி இருக்கிறது.



தெற்கு வஜீஸ்தான் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தலிபான்களுடன் சண்டையிட்ட பிறகு மீண்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வஜீஸ்தான் பகுதியில் தலிபான்களுக்கும், பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கும் இடையே நடைபெறும் தாக்குதல் தொடர்பாக பல செய்திகளை காண நேரிட்டது. 9 ஆண்டுகளுக்கு முன்பு தலிபான்களால் தாக்கப்பட்ட பாகிஸ்தான் ராணுவத்தினரின் வீடியோவை இந்தியா ராணுவம் நடத்திய தாக்குதல் என தவறாக பரப்பி வருகிறார்கள்.

இந்தியா எதிர் தாக்குதல் :



பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்துவது இந்தியா அதற்கு பதிலடி கொடுப்பதும் தொடர்கிறது. சமீபத்தில், ஜம்மு காஷ்மீரின் ராஜேரி மாவட்டத்தில் பாகிஸ்தான் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நடத்திய ஷெல் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் நயம்துல்லா வீரமரணம் அடைந்தார். இதையடுத்து, இந்திய தரப்பில் இருந்து பாகிஸ்தான் கட்டுப்பாட்டு கோட்டில் உள்ள போஸ்ட்டுகளை தாக்கி உள்ளதாக செய்தியில் வெளியாகி இருக்கிறது.

முடிவு :

நம்முடைய தேடலில், பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவத்தினர் பதிலடி கொடுத்து தாக்குதல் நடத்தியதாக செய்திகளின் வாயிலாக அறிய முடிந்தது. ஆனால், அந்த தாக்குதலால் பாகிஸ்தான் ராணுவத்தினர் வெள்ளைக் கொடியை ஏந்தியதாக பரப்பப்படும் வீடியோ தவறானது என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க