YouTurn

பனியில் உறைந்த மனிதர் | இந்திய ராணுவ வீரரா ?

பனியில் உறைந்த மனிதர் | இந்திய ராணுவ வீரரா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

நீண்ட காலமாக இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தையும், அவர்கள் பணியின் போது சந்திக்கும் துயரங்களையும் முகநூல் தளத்தில் அதிகம் கண்டு வருகிறோம். ராணுவ வீரர்கள் என பதிவிட்டாலே அப்பதிவுக்கு லைக், ஷேர் ஆயிரக்கணக்கைத் தாண்டும். அவ்வாறு ஷேர் செய்யப்படும் பதிவுகள் வைரல் ஆகிக் கொண்டே இருக்கும்...

பரவிய செய்தி

நாட்டுக்காக போராடும் இந்திய ராணுவ வீரர்கள்.

விரிவான விளக்கம்

நீண்ட காலமாக இந்திய ராணுவ வீரர்களின் உயிர் தியாகத்தையும், அவர்கள் பணியின் போது சந்திக்கும் துயரங்களையும் முகநூல் தளத்தில் அதிகம் கண்டு வருகிறோம்.

ராணுவ வீரர்கள் என பதிவிட்டாலே அப்பதிவுக்கு லைக், ஷேர் ஆயிரக்கணக்கைத் தாண்டும். அவ்வாறு ஷேர் செய்யப்படும் பதிவுகள் வைரல் ஆகிக் கொண்டே இருக்கும். அத்தகைய வைரல் பதிவுகளில் பல உண்மையானவையாக இருந்தாலும், சில தவறான பதிவுகளும் இடம்பெறுகிறது.

போட்டோஷாப் செய்த படங்கள், பிற நாட்டு ராணுவ வீரர்களின் படங்கள், ஏதோ சில படங்களை இணைத்து இந்திய ராணுவ வீரர்களின் தியாகம் என பதிவிட்டு விடுகின்றனர்.



அதை போன்றே சமீபத்தில் உடலில் பனிக் கட்டிகள் மறைத்த இராணுவ வீரர் என இப்படமும் வைரலாகியது. வைரலாகிய புகைப்படத்தில் இருப்பவர் பற்றி தேடுகையில் அப்படத்தில் இருப்பவர் பற்றிய வீடியோ ஒன்று கிடைத்தது.

உண்மையான படம் :

2017-ல் டிசம்பர் 25-ல் jerry mills என்ற Youtube சேனலில் வெளியிட்ட வீடியோ ஒன்றில் இருந்து இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. வடக்கு அமெரிக்காவில் கனடாவின் எல்லையில் அருகே உள்ள Marquette-ல் Presque  isle park-ல் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.



அங்கு பூஜ்ஜிய வெப்பநிலையில் பனிக்கட்டிகள் படிந்து இருப்பது வீடியோவில் காட்டப்பட்டுள்ளது. பிரத்யேகமாக உடை அணிந்து அங்கு உள்ள நீரில் இருக்கும் பொழுது அவர் பனிக்கட்டியில் உறைந்து இருப்பது காண்பிக்கப்படும்.

ஆக, அமெரிக்கப் பகுதியில் எடுக்கப்பட்ட படங்களை இந்திய ராணுவ வீரர் என தவறாக பரப்பியுள்ளனர். இது முதல் முறை அல்ல. இதற்கு முன்பு பரவிய செய்திகள் பற்றியும் கீழே உள்ள லிங்கில் படிக்கவும்.

இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்த பரவும் தவறான படங்கள்..!

உயிரை பணயம் வைத்து நாட்டை காக்கும் வீரர்களின் படங்களா?

இந்திய இராணுவ வீரர்களுக்கு உண்மையாகவே பெருமைகள் ஏராளம் இருக்க இம்மாதிரியான போலியான புகழ் தேவையற்றதே !

சுருக்கமாக

படத்தில் இருப்பது அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஒரு காணொளியில் வருவது. இந்திய இராணுவ வீரர் அல்ல.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…

தவறானது

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.