YouTurn

பனியில் பாதிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் கால் ? | வைரலாகும் புகைப்படம்.

பனியில் பாதிக்கப்பட்ட இந்திய ராணுவ வீரரின் கால் ? | வைரலாகும் புகைப்படம்.

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்த சமூக வலைதளங்களில் அவர்களின் தியாகங்கள் மற்றும் பணியின் சிறப்பை பதிவிடுவது வழக்கம். அவ்வாறான கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலமாக தங்களின் தேசப் பக்தியை வெளிப்படுத்தச் செய்கின்றனர். எனினும், அப்படி பதிவிடப்படும் செய்திகளுடன் இணைக்கப்பட்ட புகைப்படங்கள்...

பரவிய செய்தி

பனியில் வேலைபார்த்த ஒரு இராணுவ வீரரின் கால்கள்.

விரிவான விளக்கம்

இந்திய ராணுவ வீரர்களை பெருமைப்படுத்த சமூக வலைதளங்களில் அவர்களின் தியாகங்கள் மற்றும் பணியின் சிறப்பை பதிவிடுவது வழக்கம். அவ்வாறான கருத்துக்கள் மற்றும் புகைப்படங்கள் மூலமாக தங்களின் தேசப் பக்தியை வெளிப்படுத்தச் செய்கின்றனர்.

எனினும், அப்படி பதிவிடப்படும் செய்திகளுடன் இணைக்கப்பட்ட புகைப்படங்கள் உண்மையா என்பதை அறியாமல் பலரும் ராணுவ வீரர்கள் என்று ஒற்றை பெயருக்காகவே பகிர்ந்து விடுகின்றனர். அவ்வாறு பதிவிடப்படும் புகைப்படம் ஆயிரக்கணக்கில் ஷேர் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களை அக்கிரமிக்கின்றன.



சமீபத்தில் முகநூலில் " பனியில் வேலைபார்த்த ஒரு இராணுவ வீரரின் கால்கள் " என்ற வாசகத்துடன் காலில் மிகவும் மோசமாக தோல் உரிந்து இருக்கும் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. இப்பொழுதே அந்த புகைப்படம் பல முகநூல் பக்கங்கள் மற்றும் கணக்குகளில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ?

பனிப் பகுதியில் ராணுவத்தில் பணியாற்றிய வீரரின் கால் என வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம். புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் செய்து தேடுகையில் ஓர் முகநூல் பதிவை கண்டறிந்தோம்.



2018-ம் ஆண்டு மே 14-ம் தேதி சிங்கப்பூரைச் சேர்ந்த " Tiger Fluids " என்ற நிறுவனத்தின் முகநூல் பக்கத்தில் " காலில் மோசமாக தோல் உரிந்து இருக்கும் " புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர். அந்த பக்கத்தில் ட்ரில்லிங் தொடர்பான புகைப்படங்கள் இருப்பதை காண முடிந்தது. அந்த காலின் புகைப்படம் அங்கு வேலை பார்க்கும் ஒருவர் உடையதாக கூட இருந்து இருக்கலாம்.

முடிவு :

நம்முடைய தேடலில் இருந்து, வைரலாகும் காலின் புகைப்படம் இந்திய ராணுவ வீரர் உடைய கால்கள் இல்லை என தெரிந்து கொள்ள முடிந்தது. இப்புகைப்படம் ஓராண்டிற்கு முன்பாக முகநூலில் சிங்கப்பூர் பக்கத்தில் பதிவாகி இருக்கிறது. மேலும், ராணுவ வீரரின் கால் எனக் கூறுவதற்கு ஆதாரங்கள் இல்லை.

இந்திய ராணுவ வீரர்கள் கடுமையான சூழலில் நாட்டிற்கு பாதுகாப்பை அளிக்கிறார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், போலியான புகைப்படங்கள் மூலம் ராணுவ வீரர்களை அவமதிக்காதீர்கள்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…