YouTurn

இந்திய ராணுவம் 1000 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டியதா ?

இந்திய ராணுவம் 1000 படுக்கை கொண்ட மருத்துவமனையை கட்டியதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜனவரியில் சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரத்யேகமாக 1000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை 10 நாட்களில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியது. குறைந்த நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனையை உருவாக்கிய சீனாவின் முயற்சி உலக அளவில் பெரிதாய் பேசப்பட்டது. இந்நிலையில், கொரோனா...

பரவிய செய்தி

சீனாவை மிஞ்சிய இந்திய ராணுவத்தின் அருமையான செயல். சில மணிநேரங்களிலேயே ஆயிரம் படுக்கைகள் கொண்ட மருத்துவமனை தயார். #Barmer, #Rajasthan இந்தியாவின் பெருமையை எல்லோருக்கும் உணர்த்த அதிகம் பேருக்கு இதை ஷேர் செய்யவும்.




Facebook link | archived link 

விரிவான விளக்கம்

ஜனவரியில் சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரத்யேகமாக 1000 படுக்கை வசதி கொண்ட மருத்துவமனையை 10 நாட்களில் உருவாக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியது. குறைந்த நாட்களில் மிகப்பெரிய மருத்துவமனையை உருவாக்கிய சீனாவின் முயற்சி உலக அளவில் பெரிதாய் பேசப்பட்டது.

இந்நிலையில், கொரோனா வைரசால் தனிமைப்படுத்தப்படும் மக்களுக்கு சிகிச்சை அளிக்க 1000 படுக்கை வசதிகள் மருத்துவமனையை சில மணி நேரத்திலேயே இந்திய ராணுவம் தயார் செய்துள்ளதாக மேற்காணும் புகைப்படங்கள் முகநூல், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.



சத்ரபதி சந்துரு என்பவர் பதிவிட்ட பதிவில், " ராஜஸ்தான் மாநிலத்தின் பார்மெர் பகுதியில் இந்திய ராணுவம் 1000 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையை உருவாக்கி உள்ளது. இதற்கு சில மணி நேரங்களே ஆகின. சீனாவின் செயல்களை மட்டுமே படித்து வரும் நாம் நமது ராணுவத்தின் சாதனையை மறந்து விடுகிறோம் " எனக் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவு 9 ஆயிரம் ஷேர்களை பெற்று வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

வைரலாகும் புகைப்படங்களை ஒன்றன்பின் ஒன்றாக ரிவர்ஸ் இமேஜ் செய்கையில், பரப்பப்படும் செய்தி தவறான தகவல் என்பதை அறிய முடிந்தது. முதலில் இருக்கும் புகைப்படத்தைக் கொண்டு தேடுகையில், " 2019 செப்டம்பர் மாதம் anews.az எனும் இணையதளத்தில் ரஷ்யா 5.5 மில்லியன் மதிப்புள்ள மொபைல் ஹாஸ்பிடலை கிர்கிஸ்தான் எமெர்ஜென்சி அமைச்சகத்துக்கு வழங்கி உள்ளதாக " அதே புகைப்படத்துடன் வெளியாகி இருக்கிறது.



அடுத்தாக உள்ள புகைப்படம், 2008-ம் ஆண்டு அமெரிக்காவின் மார்ச் ஏர் ரிசர்வ் பேஸ் உடைய இணையதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. 200 படுக்கைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் கொண்ட 3 மொபைல் பீல்ட் ஹாஸ்பிடல்களில் ஒன்றாக இதனை குறிப்பிட்டு இருக்கிறார்கள்.



இறுதியாக உள்ள இந்திய ராணுவத்தினரின் புகைப்படம் 2015-ம் ஆண்டில் நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்காக மீட்கும் பணிக்கு சென்ற பொழுது எடுக்கப்பட்டது.



Twitter link | archived link 

1000 படுக்கைகளை கொண்ட மருத்துவமனையை இந்திய ராணுவம் கட்டியுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் செய்தி உண்மை இல்லை என இந்திய ராணுவத்தின் தரப்பில் ட்விட்டரில் கூறப்பட்டுள்ளது.



Twitter link | archived link 

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சமூக வலைதளங்களில் போலியான மற்றும் தவறான செய்திகளே அதிகம் வைரல் செய்யப்படுகின்றன. அதில், இந்திய ராணுவத்தை பெருமைப்படுத்துவதாக தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள். தவறான தகவல்களை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…