YouTurn

2018-ல் வேலையின்மையால் 1.3 லட்சம் இந்தியர்கள் தற்கொலையா ?| உண்மை தரவு என்ன ?

2018-ல் வேலையின்மையால் 1.3 லட்சம் இந்தியர்கள் தற்கொலையா ?| உண்மை தரவு என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்தியாவில் வேலைவாய்ப்பினை அதிகரித்து வருவது ஒருபுறம் இருந்தாலும், வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1.34 லட்சம் என தேசிய குற்ற ஆவண புள்ளி விவரம் வெளியிட்டு உள்ளதாக நியூஸ்...

பரவிய செய்தி

நாட்டில் வேலையின்மை காரணமாக 2018-ம் ஆண்டில் மட்டும் 1.34 பேர் தற்கொலை - தேசிய குற்ற ஆவண புள்ளி விவரம்.



Facebook link | archived link 

விரிவான விளக்கம்

இந்தியாவில் வேலைவாய்ப்பினை அதிகரித்து வருவது ஒருபுறம் இருந்தாலும், வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1.34 லட்சம் என தேசிய குற்ற ஆவண புள்ளி விவரம் வெளியிட்டு உள்ளதாக நியூஸ் கார்டு ஒன்று முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

வேலையின்மை காரணமாக லட்சக்கணக்கான மக்கள் தற்கொலை செய்து கொள்வதாக பரவும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. ஆகையால், இந்த செய்தி உண்மையா என அறிந்து கொள்ள ஆராய்ந்து பார்த்தோம். முதலில் இச்செய்தி வெளியிட்டது எந்த செய்தி நிறுவனம் என தேடிய பொழுது சில பதிவுகளில் ஜெயா பிளஸ் செய்தியின் லோகோ இடம்பெற்று இருந்தது.



Facebook link | archived link  

ஜனவரி 19-ம் தேதி ஜெயா பிளஸ் செய்தியின் முகநூல் பக்கத்தில் " நாட்டில் வேலையின்மை காரணமாக 2018-ம் ஆண்டில் மட்டும் 1.34 பேர் தற்கொலை - தேசிய குற்ற ஆவண புள்ளி விவரம் " என வைரலாகும் நியூஸ் கார்டு வெளியாகி இருக்கிறது. அந்த நியூஸ் கார்டே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உண்மை என்ன ? 

இந்தியாவில் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்து ஜெயா பிளஸ் செய்தி வெளியிட்ட செய்தி தவறான தகவலாகும். செய்தியை முழுமையாக பதிவிடாமல், தவறாக வெளியிட்டு உள்ளனர்.



2018-ல் நாட்டில் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறித்து வெளியான பிற செய்திகள் குறித்து தேடிய பொழுது இந்தியா டுடே செய்தியில், " 2018-ல் 18 வயது முதல் 60 வயதிற்குள் தற்கொலை செய்து கொண்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,34,516 . இதில் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 12,936 பேர். மொத்த எண்ணிக்கையில் இதன் பங்கு 9.6 சதவீதம் " என வெளியாகி இருக்கிறது.



2018-ல் வேலையின்மையால் தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கையானது விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கையை விட அதிகமாக உள்ளது. இதில் ஆண்களின் எண்ணிக்கை 10,687 மற்றும் பெண்களின் எண்ணிக்கை 2,249 . அந்த ஆண்டில் மட்டும் 10,349 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். 2017-ஐ ஒப்பிடும் பொழுது 2018-ல் நாட்டில் தற்கொலைகள் அதிகரித்து உள்ளது.

2018 suicide

எனினும், தேசிய குற்ற ஆவணப் பிரிவின் அறிக்கையின்படி, 2011 முதல் 2018  வரை என ஒவ்வொரு ஆண்டிலும் தற்கொலை செய்து கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கை 1 லட்சத்திற்கும் மேலே இருந்து வருகிறது.



பிசினஸ் டுடே வெளியிட்ட விளக்க படத்தில் இருந்து, நாட்டில் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொள்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டிலும் அதிகரித்து உள்ளதை காணலாம். 2015-ல் 10,912 ஆக இருந்த தற்கொலைகள் எண்ணிக்கை 2018-ல் 12,936 ஆக உயர்ந்து இருக்கிறது.

முடிவு : 

நம்முடைய தேடலில் இருந்து, 2018-ல் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டவர்களின் எண்ணிக்கை 1.34 லட்சம் என ஜெயா ப்ளஸ் வெளியிட்ட செய்தி தவறானது. அது 2018-ல் தற்கொலை செய்து கொண்ட மொத்த இந்தியர்களின் எண்ணிக்கை.

2018-ல் வேலையின்மை காரணமாக தற்கொலை செய்துகொண்டவர்களின் எண்ணிக்கை 12,936 என தேசிய குற்ற ஆவணப் பிரிவு வெளியிட்டு உள்ளது. நாட்டில் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருவது உண்மையென்றாலும், தவறான தகவல்களை பகிர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

பொய்

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழ…

பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…