யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2019 தேர்தல் நெருங்குவதால் பல்வேறு கருத்துக்கணிப்புகள் சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதில், இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் நரேந்திர மோடிக்கு ஆதரவு மிகவும் குறைவு எனக் குறிப்பிட்டுள்ளனர். இந்தியா டுடே மோடி பிரதமர் ஆக மக்கள் விரும்புகிறார்களா ? இல்லையா ? என...
பரவிய செய்தி
மோடி மீண்டும் பிரதமராக வாக்களிப்பீர்களா என இந்தியா டுடே நடத்திய கருத்துக் கணிப்பில் 79 சதவீதம் இல்லை என்றும், 21 சதவீதம் பேர் ஆம் என்றும் தெரிவித்துள்ளனர்.

விரிவான விளக்கம்
2019 தேர்தல் நெருங்குவதால் பல்வேறு கருத்துக்கணிப்புகள் சமூக வலைதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அதில், இந்தியா டுடே நடத்திய கருத்துக்கணிப்பு ஒன்றில் நரேந்திர மோடிக்கு ஆதரவு மிகவும் குறைவு எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தியா டுடே மோடி பிரதமர் ஆக மக்கள் விரும்புகிறார்களா ? இல்லையா ? என கருத்துக்கணிப்பு நடத்தியதா என்றுத் தேடிப் பார்க்கையில் ஆம் எனத் தெரிய வந்தது.

ஆனால், இவை தற்பொழுது நடத்திய கருத்துக்கணிப்பு அல்ல. 2013 ஆகஸ்ட் மாதத்தில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளாகும். 2013-ல் மோடி பிரதமர் ஆக வாக்களிப்பதாக 33 சதவீதமும், இல்லை என 25 சதவீதமும் முடிவுகள் வெளியாகின.

இதற்கு முன்பாக 2016-ல் இந்தியா டுடேவின் கருத்துக்கணிப்பு முடிவுகளை ஃபோட்டோஷாப் செய்து ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரப்பி இருந்தனர்.

2016 மார்ச் மாதத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தொழில்நுட்ப பிரிவைச் சேர்ந்தவர்கள் 2013-ல் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளை ஃபோட்டோஷாப் செய்து வெளியிட்டு வருவதாக ட்விட்டரில் பதிவிட்டு உள்ளனர்.
2013 ஆம் ஆண்டு வெளியான இந்தியா டுடே கருத்துக்கணிப்பை ஃபோட்டோஷாப் செய்து தற்பொழுது வைரலாக்கி கொண்டிருக்கின்றனர்.