YouTurn

இந்தியா டுடேவில் மமக தலைவர் ஜவாஹிருல்லா புகைப்படம் வெளியானதாக வதந்தி!

இந்தியா டுடேவில் மமக தலைவர் ஜவாஹிருல்லா புகைப்படம் வெளியானதாக வதந்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விரிவான விளக்கம்

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரான பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லாவின் புகைப்படத்தை " கறைபடியாத கரம். சேவை அரசியல்- மீண்டு(ம்) உயிர்த்தெழும் ஜனநாயகம் " எனும் தலைப்பில் இந்தியா டுடே தமிழ் வார இதழின் அட்டைப்பட செய்தி வெளியிட்டதாக ஓர் புகைப்படம் முகநூல், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதன் உண்மைத்தன்மை பற்றி கூறுமாறு ஃபாலோயர் தரப்பில் கேட்கப்பட்டு வருகிறது.



Facebook link | Archive link  

உண்மை என்ன ? 

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரான ஜவாஹிருல்லாவின் 2011-16 காலக்கட்டத்தில் ராமநாதபுரம் தொகுதி எம்எல்ஏவாக இருந்தார். இந்தியா டுடே தமிழ் வார இதழ் வெளியிட்டதாக பரவும் அட்டைப்பக்கத்தில் 2015 மே 27-ம் தேதி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதச் செய்தியில், தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரும் வார இதழ் வெளியீட்டை நிறுத்த உள்ளதாக வெளியாகி இருக்கிறது.



இந்தியா டுடே இதழின் அட்டைப்படம் என பரவும் புகைப்படம் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பே பரவியப் புகைப்படமாகும். மேலும், 2015-ம் ஆண்டிலேயே மமக தலைவர் ஜவாஹிருல்லா தன்னைப்பற்றி பரவும் அட்டைப்படச் செய்தி வதந்தி என முகநூலில் பதிவிட்டு இருக்கிறார்.



Archive link 

2015 மே 27-ம் தேதி தன் முகநூல் பக்கத்தில், " இந்தியா டூடே அட்டைப்படச் செய்தியாக என்னைப் பற்றி வெளிவந்ததாக கூறப்படும் செய்தி ஒரு கிராபிக்ஸ் மாய்மாலம். இந்தியா டுடே தமிழ் பதிப்பு பிப்ரவரியில் நிறுத்தப்பட்டு விட்டது. இந்தியா டூடேவில் வந்த அட்டை செய்தி யாரே திட்டமிட்டு பரப்பி கொண்டு இருக்கிறார்கள் இந்த அட்டை செய்தி உண்மை இல்லை தேவையில்லாத வதந்தி இதை யாரும் ஷேர் செய்யவேண்டாம் " எனப் பதிவிட்டு இருந்தார்.

முடிவு : 

நம் தேடலில், இந்தியா டுடே தமிழ் வார இதழ் மமக தலைவர் ஜவாஹிருல்லா பற்றிய அட்டைப்படத்துடன் கூடிய கட்டுரையை வெளியிட்டதாக உலாவும் புகைப்படம் ஃபோட்டோஷாப் செய்யப்பட்டது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த போலியான புகைப்படம் சமூக வலைதளத்தில் பகிரப்பட்டு வருகிறது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க