YouTurn

இந்தியா & இலங்கை பெட்ரோல் விலை ஒப்பீடு சரியா ?| உண்மை என்ன ?

இந்தியா & இலங்கை பெட்ரோல் விலை ஒப்பீடு சரியா ?| உண்மை என்ன ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

கலப்பு

பரவிய செய்தி

இந்திய பெட்ரோல் விலை 87 ரூபாய், இலங்கையில் பெட்ரோல் விலை 53 ரூபாய், இதுல காமெடி என்னானா இலங்கை இந்தியாவில் இருந்து தான் பெட்ரோல் வாங்குது



Facebook link | archive link 

விரிவான விளக்கம்

இந்தியாவில் தொடர்ச்சியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வின் போது அண்டை நாடுகள் மற்றும் இந்தியா பெட்ரோல், டீசல் ஏற்றுமதி செய்யும் நாடுகளுடன் விலை ஒப்பிடப்படும் பதிவுகள் வருவது வழக்கம். இம்முறையில், இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே உள்ள பெட்ரோல் விலை ஒப்பிடப்பட்டு உள்ளது. இந்தியா பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் இலங்கையில் இந்தியாவை விட விலை குறைவு என்கிற பதிவு ஆங்கிலம் மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மீம்ஸ்-களாக வைரலாகி வருகிறது. இது குறித்து, விரிவான தகவலைக் காண்போம்.



2018-ம் ஆண்டில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலில், " இந்தியா ஒரு லிட்டர் பெட்ரோலை 15 நாடுகளுக்கு ரூ.34-க்கு ஏற்றுமதி செய்வதாக " வெளியான தகவலின் போதே விரிவாக நாம் கட்டுரை வெளியிட்டு இருந்தோம்.

விரிவாக படிக்க : இந்தியா ஏற்றுமதி செய்யும் பெட்ரோலின் விலை ரூ.34 மட்டுமா???

இந்தியாவில் கச்சா எண்ணெயில் இருந்து பெட்ரோல் மற்றும் டீசல் போன்றவை பிரித்து எடுக்கப்பட்ட பிறகு பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. அந்த நாடுகளில் விற்பனை செய்யும் போது அவற்றுடன் வரிகளை இணைத்தே மக்களின் பயன்பாட்டிற்கு செல்கிறது. இலங்கை அரசு இந்தியாவிடம் இருந்து பெட்ரோல் வாங்குகிறதா என்றால், ஆம் வாங்குகிறது என்பதே பதில்.



2017ம் ஆண்டு நவம்பர் 8-ம் தேதி இலங்கை அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க அவசரநிலை தேவைக்காக இந்தியாவில் இருந்து எரிபொருள் அனுப்ப உள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பாக நவம்பர் 7-ம் தேதி வெளியான பிபிசி செய்தியில், இந்தியன் ஆயில் நிறுவனத்திடம் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 40,000 மெட்ரிக் டன் பெட்ரோல் தரமாக இல்லை என இலங்கை அரசு பெட்ரோல் கூட்டு நிறுவனத்தால் நிராகரிக்கப்பட்டதாகவும், இலங்கைக்கு 40,000 மெட்ரிக் டன் எரிபொருள் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அனுப்பி உள்ளதாக இடம்பெற்று உள்ளது.

2017-ம் ஆண்டு wits.worldbank.org தரவுகளின் படி, இலங்கை அரசு எரிபொருளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்கிறது.

www.globalpetrolprices.com எனும் இணையதளத்தில் ஒவ்வொரு நாட்டில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலின் விலை வரிசைப்படுத்தப்பட்டு உள்ளன. 2020 ஜூலை 27 நிலவரப்படி, இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 0.87 அமெரிக்க டாலருக்கும், இந்தியாவில் 1.11 அமெரிக்க டாலருக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்திய ரூபாயில் ஒரு லிட்டர் பெட்ரோல் 83 ரூபாய்-க்கு (ஒவ்வொரு மாநிலத்தையும் பொறுத்து) விற்பனை செய்யப்படுகிறது. அதே ஒரு லிட்டர் பெட்ரோல் இலங்கையில் 161.81 ரூபாய்(இலங்கை ரூபாய்) விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் 65.05 ரூபாயாகும். இந்தியாவிற்கும், இலங்கைக்கும் ரூபாய் மதிப்பில் வித்தியாசம் உள்ளது. இந்தியாவின் ஒரு ரூபாய் ஆனது இலங்கையின் 2.69ரூபாய்க்கு சமம். டாலர் பட்டியலில் பார்க்கும் போது, இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவே.



மார்ச் 2020-ல் இலங்கையில் 95 octane பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 141 ரூபாய்-க்கு (இந்திய மதிப்பில் 56.ரூ) மற்றும் 92 octane பெட்ரோல் லிட்டருக்கு ரூ.117க்கும் (இந்திய மதிப்பில் 47.ரூ) விற்பனையானது. அந்த மாதத்தில், இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் தோராயமாக 71ரூபாய்-க்கு விற்பனை செய்யப்பட்டது.



மேலும் படிக்கஇந்தியாவில் பெட்ரோல், டீசல் மீதான உண்மையான வரி விதிப்பு எவ்வளவு ?

இந்தியாவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகமாக இருக்க காரணம் இங்கு விதிக்கப்படும் அதிகப்படியான வரிகளே. கச்சா எண்ணெய் விலை குறையும் போதெல்லாம் மத்திய மற்றும் மாநில வரிகள் உயர்த்தப்படுகின்றன. கடந்த சில மாதங்களில் மத்திய கலால் வரி, மாநில வாட் வரி உயர்த்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிவு : 

நம் தேடலில், இலங்கை அரசு இந்தியாவிடம் பெட்ரோல் வாங்குவது மற்றும் இந்தியாவை விட இலங்கையில் பெட்ரோல் விலை குறைவு போன்ற தகவல் உண்மை என்றாலும், இந்தியாவில் பெட்ரோல் விலை 87ரூபாயாக இருக்கும் போது இலங்கையில் 53.ரூ எனக் கூறும் தகவல் தவறானது. 2020 ஜூலை 27-ம் தேதி படி இந்தியாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 83 ரூபாய், இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 65.05 (இலங்கை ரூபாயில் 161.81) என அறிந்து கொள்ள முடிந்தது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க