யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்தியாவில் ஆங்கிலேயே ஆதிக்கத்தின் போது இந்திய அரசால் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் தாளில் ஹிந்தி மொழி இல்லை எனக் கூறிய இப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த ரூபாய் தாளில் தமிழ் உள்ளிட்ட எட்டு மொழிகள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது. அந்த நோட்டில் தமிழ் மொழி உள்ளிட்ட 8 மொழியில் பத்து ரூபாய்...
பரவிய செய்தி
இந்தியாவில் முதன் முதலாய் அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டில் இந்தி இல்லை. சமஸ்கிருதம் இல்லை! தமிழ் இருக்கிறது ! #தெரிந்து கொள்ளுவோம்.

விரிவான விளக்கம்
இந்தியாவில் ஆங்கிலேயே ஆதிக்கத்தின் போது இந்திய அரசால் வெளியிடப்பட்ட பத்து ரூபாய் தாளில் ஹிந்தி மொழி இல்லை எனக் கூறிய இப்படமானது சமூக வலைதளங்களில் வைரலாகியது. அந்த ரூபாய் தாளில் தமிழ் உள்ளிட்ட எட்டு மொழிகள் மட்டுமே இடம்பெற்று இருக்கிறது.
அந்த நோட்டில் தமிழ் மொழி உள்ளிட்ட 8 மொழியில் பத்து ரூபாய் என அச்சிட்டுள்ளனர். அந்த ரூபாய் நோட்டில் மொழிகளுக்கு கீழே கவனித்தால் 30 ஏப்ரல் 1912 என ரூபாய் நோட்டு அச்சிட்ட வருடம் இடம்பெற்று உள்ளது.
அன்றைய ஆங்கிலேயே ஆட்சியில் 1910 முதல் 1920 வரையிலான காலக்கட்டத்தில் வெளியிடப்பட்ட 10 ரூபாய் நோட்டுகளின் தொகுப்பில் 1912 வருடத்தில் பரவிய இந்த ரூபாய் நோட்டு இடம்பிடித்து உள்ளது. அவை லாகூர் வெளியீடு என குறிப்பிட்டு உள்ளனர்.

இதைத் தவிர, இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ இணையதளத்தில் பிரிட்டிஷ் காலத்து ரூபாய் நோட்டுகளின் படங்கள் உள்ளன. அதிலும், இப்படங்கள் இடம்பெற்றுள்ளது.
எட்டு மொழிகள் :
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் வெளியான ரூபாய் 1 முதல் 500 வரையிலான நோட்டுகளில் 8 மொழிகள் மட்டுமே இடம் பிடித்து இருந்தன. அன்றைய ரூபாய் நோட்டுகளில் உருது, கெய்தி, பெங்காலி, பர்மிஸ், தெலுங்கு, தமிழ், கன்னடா மற்றும் குஜராத்தி போன்ற எட்டு மொழிகள் மட்டுமே இருந்தன.
ஒரு ரூபாய் நோட்டு :

இதற்கு முன்பாக பிரிட்டிஷ் ஆட்சியில் வெளியான ஒரு ரூபாய் நோட்டில் ஹிந்தி மொழி இல்லை என்ற செய்தி பரவின. மிகப்பெரிய விவாதம் எழுந்தது. அப்பொழுது பரவிய ரூபாய் நோட்டுகளில் ஹிந்தி மொழி இல்லை, கெய்தி மொழியை ஹிந்தி மொழி என தவறாக பரப்பி வருகின்றனர் என பதிவிட்டு இருந்தோம்.
அதைப் பற்றி படிக்க :1 ரூபாய் நோட்டில் இந்தி மொழியே இல்லை.
அவ்வாறு பரவிய ஒரு ரூபாய் நோட்டுகள் 1917 ஆம் ஆண்டில் அச்சிடப்பட்டவை. தற்போது பரவி வரும் 10 ரூபாய் நோட்டு 1912 ஆம் ஆண்டிலேயே அச்சிடப்பட்டவை. இரண்டிலும் ஹிந்தி மொழி இல்லை.

மேலும், இந்தி மொழியானது இந்தியாவின் சுதந்திரத்திற்கு பிறகே ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டன. 1953 ஆம் ஆண்டுகளுக்கு பிறகே இந்தி மொழியானது பெரும்பாலும் இந்திய ரூபாய் நோட்டுகளில் இடம்பெற துவங்கின என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
வட மாநிலங்களில் அதிகளவில் பேசப்படும் இந்தி மொழியானது இந்தியாவின் அலுவல் மொழியாக உள்ளது தவிர தேசிய மொழி அல்ல.
இந்திய சுதந்திரத்திற்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளில் ஹிந்தி, சம்ஸ்கிருதம் இல்லை, தமிழ் மொழி இருப்பதாக பரவும் செய்தி உண்மையே !

சுருக்கமாக
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இந்தியாவில் இருந்த முக்கியமான 8 மொழிகள் ரூபாய் நோட்டுகளில் அச்சிடப்பட்டு வந்தன. அதில் ஹிந்தி இடம்பெறவில்லை. மேலும், எந்த எந்த மொழிகள் உள்ளன. எந்த வருடத்தில் ரூபாய் நோட்டுகள் வெளியாகின என்பதை தொடர்ந்து படியுங்கள்.