YouTurn

இந்தியாவில் 1995-ல் தான் போலியோ தடுப்பூசி செலுத்துவது தொடங்கியதா ?

இந்தியாவில் 1995-ல் தான் போலியோ தடுப்பூசி செலுத்துவது தொடங்கியதா ?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

இந்தியாவில் போலியோ பேரழிவு.. 1955 போலியோ தடுப்பூசியை அமெரிக்கா கண்டுபிடித்தது, 1995 இந்தியாவில் போலியோ தடுப்பூசி தொடங்கப்பட்டது.

விரிவான விளக்கம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதால் தடுப்பூசி செலுத்திக் கொள்ள மக்கள் ஆர்வமாக முன் வருகின்றனர். இந்நிலையில், 2019 டிசம்பரில் பரவத் தொடங்கிய கொரோனாவிற்கு 2020-ல் இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடித்தது பாஜக அரசு, ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் போலியோவிற்கு தடுப்பூசி கொண்டு வர 40 ஆண்டுகள் ஆகியது, இந்தியாவில் 1995-ல் தான் போலியோ தடுப்பூசி போடப்பட்டது என ஒப்பிட்டு வெளியிட்ட தமிழக பாஜகவின் இளைஞரணி போஸ்டர் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.





Archive link 

உண்மை என்ன ?

இளம்பிள்ளை வாதம் எனும் போலியோ பாதிப்பிற்கான தடுப்பூசி குறுகிய காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதோ அல்லது குறுகிய காலத்தில் மக்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதோ அல்ல. பல சதாப்தங்களுக்கு பிறகு இந்தியாவில் போலியோ பாதிப்பு நீங்கி இருக்கிறது.

இந்தியாவில் போலியோ தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து தேடுகையில், pubmed.ncbi.nlm.nih.gov இணையதளத்தில் வெளியான கட்டுரையில், " 1979-80ல் இந்தியாவின் தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தில் வாய்வழி போலியோ தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட்டது " எனக் கூறப்பட்டுள்ளது.



2014-ல் vaccine.icmr.org தளத்தில் வெளியான கட்டுரையில், " இந்தியாவில் OPV(வாய்வழி போலியோ தடுப்பூசி) 1967 ஆம் ஆண்டில் கிடைத்தது, இந்தியாவில் முதல் முறையாக சுதேச வாய்வழி போலியோ தடுப்பூசி ட்ரைவலண்ட்(சபின்) 1970ல் உருவாக்கப்பட்டது " எனக் குறிப்பிட்டு உள்ளதை காணலாம்.



" இந்தியாவில் நோய்த்தடுப்பு தொடர்பான விரிவாக்கப்பட்ட(EPI, 1978) திட்டம், பின்னர் யுனிவர்சல் நோய்த்தடுப்பு திட்டத்தின்(UIP,1985) கீழ் இந்தியாவில் போலியோ தடுப்பூசியை அறிமுகப்படுத்தியது. ஆனால், 1995 முதல் சிறப்பு போலியோ பிரச்சாரங்களை மேற்கொள்ள தொடங்கியது " என இந்திய சுகாதாரத் துறை இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது.



1995-க்கு முன்பாக இந்தியாவில் போலியோ தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் புகைப்படங்கள் கூட alamy தளத்தில் வெளியாகி இருக்கிறது. 1955-களில் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ தடுப்பூசி மருந்துகள் 1960களில் உலக நாடுகளில் பயன்பாட்டிற்கு வரத் தொடங்கின.

முடிவு :

நம் தேடலில், போலியோ தடுப்பூசி கண்டறிந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் 1995-ம் ஆண்டில் தான் போலியோ தடுப்பூசி செலுத்துவது தொடங்கப்பட்டது என பகிரப்பட்ட தகவல் தவறானது.

1970களிலேயே இந்தியாவில் வாய்வழி போலியோ தடுப்பூசி கிடைத்து இருக்கிறது, உருவாக்கப்பட்டும் இருக்கிறது. 1978-ல் EPI திட்டம் மற்றும் 1985-ல் UIP திட்டம் போலியோ தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்கிறது. தேசிய நோய்த்தடுப்பு நாள் என பொதுவாக அழைக்கப்படும் பல்ஸ் போலியோ நோய்த்தடுப்பு திட்டம் 1995-ல் தொடங்கப்பட்டது என அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க