யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. சமஸ்கிருதமே இந்தியாவின் மூத்த மொழி. அதன் வரலாறே இந்தியாவின் வரலாறு - நட்டா

Twitter link | Archive link

Twitter link | Archive link
விரிவான விளக்கம்
பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஜே.பி.நட்டா, "இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. சமஸ்கிருதமே இந்தியாவின் மூத்த மொழி. அதன் வரலாறே இந்தியாவின் வரலாறு " எனக் கூறியதாக தினமலர் உடைய நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

உண்மை என்ன ?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொன்மையான பொருநை ஆற்றங்கரை நாகரிகம் பற்றிய பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், " இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனி தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் " எனப் பேசினார்.

Twitter link
முதல்வர் மு.க.ஸ்டாலின் உடைய இக்கூற்றை மறுத்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்த கருத்து என தினமலர் நியூஸ் கார்டு பரவி வருகிறது. ஆனால், தினமலர் முகநூல் பக்கத்தில் அப்படியொரு நியூஸ் கார்டு வெளியாகவில்லை.
Facebook link
தினமலரில் செப்டம்பர் 11-ம் தேதி, " உ.பி., உத்தரகாண்ட் கோவாவில் மீண்டும் பா.ஜ., ஆட்சி நிச்சயம்: நட்டா " என இடம்பெற்ற நியூஸ் கார்டே வெளியாகி இருக்கிறது.

முடிவு :
நம் தேடலில், இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டில் இருந்து தான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்ற முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது என பாஜக தலைவர் ஜே.பி.நட்டா கூறியதாக பரவும் தினமலர் நியூஸ் கார்டு போலியானது என அறிய முடிந்தது.